*சாமானிய மக்களை ஏமாற்றும் அரசியல் சூழ்ச்சிகள்*
*அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு சூழலில்,*
நடிகர் விஜய்யை “பாஜகவின் கைக்கூலி” என்று முத்திரை குத்துவது அப்பட்டமான அநீதி மற்றும் அரசியல் சூழ்ச்சி. விஜய் உண்மையில் யாருடைய நிழலாகவும் இருக்க விரும்பவில்லை என்பதற்கு மிகப்பெரிய சான்று, அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரக் காட்டிய அதீத விருப்பம்.
உண்மையைச் சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காகவே விஜய் பல நாட்கள் காத்திருந்தார்;
வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்குக் காரணமே இந்த காங்கிரஸ் கூட்டணி மீதான நம்பிக்கைதான்.
ஆனால், விஜய்யோடு கூட்டணி என்று ஒரு நாடகத்தை ஆடிய காங்கிரஸ், இறுதியில் திமுக கொடுக்கும் அதிகப்படியான சீட்டுகளுக்கு ஆசைப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்துவிட்டது.
காங்கிரஸால் ஏமாற்றப்பட்ட ஒருவரை, “பாஜக அனுப்பிய ஆள்” என்று திமுக அரசு கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் ஒரு கீழ்த்தரமான கோட்பாடு.
அதேபோல், சமீபத்தில் பொங்கல் அன்று வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டது என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், அந்தத் திரைப்படத்தின் நடிகர்களையும் இயக்குநர்களையும் டெல்லியில் தேநீர் விருந்து கொடுத்து பாஜகவின் மோடி அவர்கள் கொண்டாடுகிறார். ஒருபுறம் திமுக ஆதரவுப் படக்குழுவினரை பாஜக அரவணைக்கிறது, மறுபுறம் விஜய்யை பாஜகவின் ஆள் என்று திமுக முத்திரை குத்துகிறது.
இந்த முரண்பாடான அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் கலைஞர்களை பாஜக கொண்டாடும் போது வராத சந்தேகம், சுயமாக ஒரு கட்சியை நடத்தும் விஜய்யின் மீது மட்டும் ஏன் வருகிறது?
இது அரசியல் தெளிவு இல்லாதவர்களின் பிதற்றல் மட்டுமல்ல, ஒரு புதிய சக்தியை வளரவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட சதிவலை. காங்கிரஸால் ஏமாற்றப்பட்டு, தனித்து நின்று போராடும் ஒருவரை கைக்கூலி என்று சொல்வது அநாகரிகமான செயல். இத்தகைய அநீதியான பரப்புரைகளை முறியடிக்க வேண்டியது விஜய் ஆதரவாளர்களின் கட்டாய கடமை .
*ஆனந்த்*
*WISDOM NEWS*





