கோயில் சொத்து குல நாசமா?
தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகங்களும் அவற்றின் சொத்துக்களும் நீண்ட காலமாக அரசியல் விவாதத்தின் மையமாக இருந்து வருகின்றன. அண்மையில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், கோயில் சொத்துக்கள் மற்றும் குளங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுடன் முடிந்துவிடாமல், கோயில் சொத்துக்கள் வரலாற்றில் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன, பின்னர் யாருடைய கட்டுப்பாட்டுக்குச் சென்றன என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். பண்டைய தமிழகத்தில் கோயில்கள் மன்னர்கள், ஊர்ச் சபைகள் மற்றும் பொதுமக்களின் […]









