புதிய அரசியல் பார்வை

ரோட்டுக்கடை முதல் 5ஸ்டார் ஓட்டல் வரை – பெங்களூரு சம்பவம் தமிழகத்திற்கும் எச்சரிக்கை மணியா?

மனிதனின் அன்றாட வாழ்வில் உணவு இன்றியமையாத ஒன்று. ஆனால், அந்த உணவை வழங்கும் சிறு கடை முதல் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை, எவ்வளவு தரமாகவும் சுத்தமாகவும் உணவு தயாரிக்கப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.அண்மையில் பெங்களூருவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் பரிசோதனையில், 26 நட்சத்திர ஹோட்டல்களில் 350 கிலோவுக்கும் அதிகமான காலாவதியான இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் 32 லிட்டர் கெட்டுப்போன பால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் தாஜ், ரேடிசன், லலித் அசோக், ஷாங்ரிலா போன்ற பெயர் பெற்ற ஹோட்டல்களும் அடங்கும்.இது கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் என்றாலும், தமிழகத்திற்கும் இது ஓர் எச்சரிக்கை மணி.

தமிழகத்தில் சாதாரண சாலையோரக் கடைகள், பெரிய உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மீது முறையான, தொடர்ச்சியான கண்காணிப்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாதத்திற்கு எத்தனை சோதனைகள் நடத்தப்படுகின்றன, எந்தெந்த உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன, என்ன குறைபாடுகள் கண்டறியப்பட்டன, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.

காலாவதியான இறைச்சி, நீண்ட நாட்கள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கெட்டுப்போன பால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மக்களின் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, லாபத்திற்காக மக்களின் உயிருடனும் ஆரோக்கியத்துடனும் விளையாடும் உணவகங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையோரக் கடைகளும் சுத்தமான சூழலில் இயங்க வேண்டும். பகலில் கழிவுகள் கொட்டப்படும் இடங்களிலும், சுகாதாரமற்ற பகுதிகளிலும் இரவில் உணவுக் கடைகள் இயங்குவதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது.

அரசு சுத்தமான இடங்களை ஒதுக்கி, குடிநீர், கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.சிறு ஓட்டல் முதல் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை அனைத்து உணவு தயாரிப்பு இடங்களிலும் மாதத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை திடீர் பரிசோதனை நடத்த வேண்டும். பரிசோதிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியல், கண்டறியப்பட்ட குறைபாடுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும். விதிமீறல் செய்பவர்களுக்கு பெரிய அபராதம் விதிப்பதுடன், தேவையான இடங்களில் ஹோட்டலை மூடுதல், உரிமத்தை ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அரசின் முழுமையான கடமை. சட்டங்கள் இருப்பது மட்டும் போதாது; அவை எந்தவித சமரசமுமின்றி செயல்படுத்தப்பட வேண்டும்.

தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் தரமான, கலப்படமில்லாத, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையும், இந்த செய்திப் பதிவின் நோக்கமும் ஆகும்.

ஆனந்த்

WISDOM NEWS

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புதிய அரசியல் பார்வை

*சாமானிய மக்களை ஏமாற்றும் அரசியல் சூழ்ச்சிகள்* 

  • April 25, 2026
 *அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு சூழலில்,* நடிகர் விஜய்யை “பாஜகவின் கைக்கூலி” என்று முத்திரை குத்துவது அப்பட்டமான அநீதி மற்றும் அரசியல் சூழ்ச்சி. விஜய்
புதிய அரசியல் பார்வை

புதிய மாற்றத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்கும் தேர்தல்” 

  • April 25, 2026
நாம் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிக் கவலைப்படுகிறோம். அதன் பிறகு யார் ஆட்சி செய்கிறார்கள், என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன, லஞ்சம்,
Translate »