நிஜங்கள்

விஜய்யின் வெற்றி: பிரபஞ்ச நகர்வு – Code 27 | 108 

தமிழக அரசியலில் “பின்னணி பலம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை” என்ற கட்டமைப்பைத் தகர்த்து, ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய். இது ஏதோ ஒரு நாளில் தற்செயலாக நிகழ்ந்த மாற்றம் அல்ல; சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தனது ரசிகர் மன்றத்தின் ஒவ்வொரு சிறு திட்டத்திலும் மக்கள் நலனை விதைத்து, திட்டமிட்டுச் செதுக்கப்பட்ட ஒரு நீண்ட காலப் பயணம். ஒரு மனிதனைப் பிரபஞ்சம் எப்படி ஒரு மாபெரும் மாற்றத்திற்காக நகர்த்துகிறது என்பதற்கான சாட்சியாகவே விஜய்யின் அரசியல் நகர்வுகள் அமைகின்றன. அவர் எதிர்கொண்ட சவால்களும், தடைகளும் உண்மையில் தடைகள் அல்ல, மாறாகப் பிரபஞ்சம் அவரைப் பக்குவப்படுத்த ஏற்படுத்திய ஏணிகள்.

​எண்ணியல் (Numerology) என்பது அணுக்களால் ஆன இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமொழி. நவீன இயற்பியலின் தந்தை நிக்கோலா டெஸ்லா, “3, 6, 9 ஆகிய எண்களின் மகத்துவத்தை உணர்ந்தால், பிரபஞ்சத்தின் திறவுகோல் உங்கள் கையில் கிடைக்கும்” என்றார். அந்த வகையில் விஜய்யின் வாழ்வில் 27 மற்றும் 108 ஆகிய எண்கள் பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடுகளாகத் திகழ்கின்றன.

​விஜய்யின் அரசியல் பயணத்தில் 27 என்ற எண் ஒரு சாதாரண தேதியல்ல; அது ஒரு நிலை முடிந்து மற்றொரு நிலை தொடங்குவதற்கான மாற்றக் குறியீடு. 2024 அக்டோபர் 27-ல் அவர் தொடங்கிய முதல் மாநில மாநாடு, 2025 செப்டம்பர் 27-ல் கரூரில் நடந்த அந்தச் சோதனைக்கால விபத்துச் சம்பவம், மற்றும் 2025 டிசம்பர் 27-ல் நடந்த ‘ஜனநாயகன்’ ஆடியோ வெளியீட்டு விழா என ஒவ்வொன்றும் அவருக்குப் பாடத்தையும் பக்குவத்தையும் தந்து, ஒரு சாதாரண மனித நிலையிலிருந்து உறுதிமிக்கத் தலைவனாக அவரை மாற்றியது. இந்த 27-இல் தொடங்கிய தீவிரப் பயிற்சிதான், இன்று 108 என்ற பிரபஞ்ச முழுமையின் எண்ணில் வந்து நிலைபெற்றுள்ளது.

​108 என்பது வானியல் ரீதியாக பூமிக்கும் சூரியன், சந்திரனுக்கும் இடையிலான தூரம் அவற்றின் விட்டத்தைப் போல 108 மடங்கு என்ற அறிவியல் உண்மையைக் கொண்டது. ஆன்மீகத்தில் 108 திவ்ய தேசங்கள், 108 மணிகள் கொண்ட ஜெபமாலை என இது முழுமையின் அடையாளம். உளவியல் ரீதியாக இது ஒரு ‘காக்கும் எண்’ என்பதால் தான் 108 ஆம்புலன்ஸ் சேவையும் உருவானது. விஜய் பெற்றுள்ள 108 தொகுதிகளின் வெற்றி என்பது பிரபஞ்சத்தின் தீர்ப்பு; சிதறிக் கிடந்த மக்களின் நம்பிக்கையை மாற்றத்தை நோக்கி விஜய் இணைத்திருக்கிறார்.

​இந்த மாற்றம் முழுமை பெற விஜய் அவர்களின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகள் செய்ய வேண்டிய ஒரு மிக முக்கியமான கடமை இருக்கிறது. உங்களின் எண்ண அதிர்வுகளால் மாற்றத்திற்கான காரியங்களை பிரபஞ்சத்தின் வழியாக விஜய்யோடு தொடர்புபடுத்த வேண்டும். எப்போதெல்லாம் அநீதி நடக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த அநீதிக்கு எதிரான குரலும், தகவலும் விஜய்யின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் பிரபஞ்சத்திடம் வைக்க வேண்டும்.

​பெண்கள் உரிமை, பெண்களுக்குச் சம வாய்ப்பு, அநீதிகள் ஒழிக்கப்படுதல், போதை கலாச்சாரம் அறவே அகற்றப்படுதல் மற்றும் மனித மாண்பு நிலைக்க வேண்டும் என்ற உன்னதச் சிந்தனைகளை நீங்கள் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தோடு விஜய்யிடம் பேச வேண்டும். ஆட்சியின் போது ஏற்படும் இடையூறுகளையும், குறைகளையும் நன்மையாக மாற்ற வேண்டும் என்று உங்கள் எண்ணங்கள் மூலம் அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். உங்களின் இந்த நேர்மறையான எண்ண அதிர்வுகள் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து விஜய்யைச் சென்றடையும் போதுதான், பிரபஞ்சம் எதற்காக அவரை நகர்த்தியதோ அந்த நோக்கம் முழுமை பெறும்.

​அவர் சொல்வது போல ‘கான்ஃபிடெண்டாக’ (Confident) இருங்கள். இது காலத்தின் மாற்றச் சுழற்சிக்கான வெற்றி. மாற்றத்தை வரவேற்போம். இனி எல்லாமே மாறும்; இந்த பிரபஞ்ச நகர்வு சமூக பொருளாதார வளர்ச்சியையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தி உன்னதமான நன்மையைக் கொண்டு வரும்.

: ஆனந்த் – IN MEDIA

(Wisdom News)

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிஜங்கள்

நம்ம நாய்க்கும் கொரோனா வருமா?– உண்மையா இது

  • June 2, 2025
அவர் வீட்டு நாய்க்கு கொரோனா வந்திருக்கிறதாம்!” என்ற வதந்தி ஒரு பகுதியில் பரவியது. அதைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் தலையாட்டினார்கள். ஆனால் சிலர் பயத்துடன் தங்கள்
Translate »