நிஜங்கள்

இயற்கை சுழற்சியும் பிரபஞ்ச நீதியும்.

ஆனந்த் – இன் மீடியா WISDOM NEWS

மலைகளின் நீதி குரல் 

 ஒரு நாட்டுடைய வளர்ச்சி அதனுடைய வளங்களாகும் தான் தீர்மானிக்கப்படுகிறது. நாம் யார் என்ற அடையாளமே நாம் வாழ்கின்ற இந்தச் சூழலையும், நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. 

“நான் ஒரு தமிழன்” என்று கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளும் ஒருவனின் அறிவு, சிந்தனை, செயல்பாடு, ஆளுமை அனைத்தும் அவன் வாழும் நிலத்தின் வளங்களைச் சார்ந்துதான் கட்டமைக்கப்படுகிறது.

 நம் முன்னோர்கள் வகுத்த ஐந்திணைகளில் முதன்மையான ‘குறிஞ்சி’ எனப்படும் மலையும் மலை சார்ந்த இடமுமே நம் அறிவின், நம் வீரத்தின் ஊற்றுக்கண். இந்த வளங்களை இழப்பது என்பது நம்முடைய வரலாற்று அடையாளத்தையும், நம் சுயத்தையும் நாமே அழித்துக் கொண்டு இருளில் மூழ்கிப்போவதற்குச் சமம். வளம் என்று பேசத் தொடங்கும்போதே நம் நினைவுக்கு வருவது நீர்நிலைகளும் மழையும்தான். ஆனால், அந்த மழையையும் வான்மேகங்களையும் ஈர்த்து, ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அளப்பரிய ஆற்றலையும் சக்தியையும் வாரி வழங்குபவை மலைகள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

கடல், நீர்நிலைகள், காடுகள் மற்றும் மலைகளின் இணக்கமான செயல்பாடே ஒரு நாட்டின் விவசாயத்தையும் உற்பத்தியையும் தீர்மானிக்கிறது. 

இத்தகைய பேராற்றல் கொண்ட இயற்கை வளங்கள், சுரண்டப்பட்டாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் என்ற அறியாமையும், பிற்போக்குத்தனமான சிந்தனையும் இங்கு திட்டமிட்டோ அல்லது அலட்சியத்தினாலோ வளர்க்கப்பட்டு, ஊழலாகப் பெருகி வருகிறது. 

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உருவான இந்த மலைகள்தான், பூமியின் தட்பவெப்ப நிலையைச் சமன்படுத்தி, மேகங்களை மழையாக்கித் தருகின்றன.

மலைகள் என்பவை வெறும் மண்பகுதியோ அல்லது பாறைக்குவியலோ அல்ல; அவை பிரபஞ்சத்தின் பேராற்றலைத் தன்னுள் தேக்கி வைத்து பூமிக்கு விநியோகிக்கும் மின்காந்த மையங்கள் ஆகும்.

 பாறைகளுக்குள் இருக்கும் குவார்ட்ஸ் போன்ற கனிமப் படிகங்களின் இயற்கையான அழுத்தத்தினால் உருவாகும் அழுத்த மின்னாற்றல் (Piezoelectric energy) மற்றும் பூமியின் உட்பகுதியில் ஓடும் காந்தப்புல அதிர்வுகள் 

(Telluric currents) இந்த மலைகளில் மிக உன்னதமான அளவில் இயங்குகின்றன. இவற்றுடன் மலைகளில் எப்போதும் சுழன்றடிக்கும் பிராண ஆற்றலும் சேர்ந்து ஒரு மாபெரும் ஆற்றல் வளையத்தை உருவாக்குகின்றன.

 இந்த மின்காந்த அலைவரிசைதான் ஒரு பிரபஞ்ச ஆண்டெனா போலச் செயல்பட்டு, வான் மேகங்களை காந்தம் போல் ஈர்த்து, குளிர்ந்த காற்றுடன் தொடர்புபடுத்தி இப்பூமிக்கு பெருமழையாகப் பொழியச் செய்கிறது. மலைகள் இல்லையென்றால் மேகங்களை ஈர்க்கும் ஆற்றல் பூமிக்கு இல்லாமல் போய், ஒட்டுமொத்த வான் mழையின் சுழற்சியும் முற்றிலும் முடங்கிவிடும். 

இந்த ஆற்றல் சுழற்சிதான் அங்குள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தின் உயிர்நாடி. மலைகளை மட்டுமே நம்பி வாழும் அரிய வகை உயிரினங்கள், பறவைகள் மற்றும் பூச்சியினங்களின் உலகம் மனித அறிவுக்கு எட்டாத பேரதிசயம்.

காடுகளின் மகரந்தச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அரிய வகை மலை வண்ணத்துப்பூச்சிகள், மண்ணின் நுண் துளைகளை உருவாக்கும் வண்டுகள், இலைதழைகளை மக்கச் செய்து உரமாக்கும் லட்சக்கணக்கான நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சியினங்கள் என இந்த உணவுச் சங்கிலியின் அடித்தளம் மலைகளில்தான் தொடங்குகிறது.

 சோலைப்பாடி, மரம்பொத்திகள், காடுகளின் விதைகளைப் பரப்பும் மாபெரும் இருவாச்சிப் பறவைகள் போன்ற அரிய வகை மலைப் பறவைகளும், பூச்சிகளும் ஒன்றோடொன்று பிணைந்த ஒரு நுணுக்கமான உயிர்ச் சங்கிலியை உருவாக்குகின்றன. 

மலைகள் அழியும்போது இந்த அரிய உயிரினங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பது, ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் அறுத்து, மனித இனத்திற்கே மாபெரும் உயிரியல் கேடாகவும், தீராத நோய்களாகவும் உருவெடுக்கிறது.

நாமோ, மூல காரணமான இயற்கை அழிவை உணராமல், நோய்களைப் பற்றி மட்டும் ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைந்து பெரிதாக கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

 சாதி, மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நம்மை நாமே சுருக்கிக்கொண்டு, பேராசையின் காரணமாகச் சொந்த மதத்திலும் சாதியிலும் உள்ள மக்களுக்கு வஞ்சகம் செய்யும் சில பேராசை பிடித்தவர்கள், தான் மட்டும் வாழ வேண்டும் என்ற அதிகாரப் போக்குடன் இந்த மலைகளைக் கொள்ளையடித்து வருகிறார்கள்.

மலைகளின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு பேரண்டத்தின் உயிர் ஆற்றலின் ஒயிலாட்டம் இருக்கிறது. 

மனித இனம் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான அடிப்படைச் சக்தியை இந்த மலைகளின் அதிர்வுகளே வழங்குகின்றன. மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே நிகழும் இந்த இயற்கைச் சுரண்டலுக்கு, மத்திய, மாநில அரசுகளும், பிற ஆளும் வர்க்கத்தினரும் மக்களின் உளவியல், ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைக் குறித்த எந்தவொரு தீர்க்கமான தொலைநோக்கு ஆய்வுச் சிந்தனையும் இன்றி, 

மக்களை மாண்போடு நடத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாமல், இந்த இயற்கை வளங்களையும் மணல்களையும் தாறுமாறாகச் சுரண்டுவதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.

 நல்ல காற்றும், தூய்மையான நீரும், வளமான நிலமும் இல்லாமல் மனித இனமும் பிற உயிரினங்களும் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அநீதிக்குத் துணையாக நிற்கும் அரசும் அதன் அதிகாரிகளுமே இந்த வரலாற்றுப் பிழையில் சம பங்கு வகிக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் இந்த மலைகளின் மின்காந்த ஆற்றலையும் பிரபஞ்ச சக்தியையும் மிகத் துல்லியமாக உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், தங்களின் அதிநவீன மெய்ஞ்ஞான அறிவியலால், பிரபஞ்ச ஆற்றல் அதிகம் குவிந்துள்ள மலைமுடிகளில் கோயில்களை நிறுவினார்கள். அக்கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல; அவை பூமியின் காந்த விசையையும் பிரபஞ்சத்தின் கதிர்வீச்சுகளையும் ஒரு புள்ளியில் குவித்து மனிதர்களுக்கு வழங்கும் ஆற்றல் மையங்கள். 

சித்தர்கள் இந்த மலைகளையே தங்களின் இருப்பிடமாகக் கொண்டு, அங்குள்ள அரிய மூலிகைகளையும், மலைகளின் பிரபஞ்ச அதிர்வுகளையும் பயன்படுத்தி தவம் இயற்றினார்கள். மனித குலத்திற்கான அரும்பெரும் மருத்துவக் கண்டுபிடிப்புகளையும், வாழ்வியல் தத்துவங்களையும், வான் சாஸ்திர அறிவியல் கோட்பாடுகளையும் அவர்கள் இந்த மலைகளின் மடியில்தான் கண்டறிந்து நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

 இன்று பேராசையினாலும் அதிகார வர்க்கத்தின் வஞ்சக சுரண்டலாலும் இந்த மலைகள் வெட்டிச் சிதைக்கப்படும்போது, அங்குள்ள லட்சக்கணக்கான உயிரினங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. மலைகளின் மின்காந்தப் புலம் சிதைக்கப்படும்போது, சித்தர்கள் நமக்காக விட்டுச் சென்ற ஆன்மீக, அறிவியல் அதிர்வுகள் நம்மை விட்டு நிரந்தரமாக மறைகின்றன. இதன் விளைவாக, மனித குலம் தன் சுய சிந்தனையை இழந்து, தங்களின் தார்மீக அடையாளத்தையும் தொலைத்துவிட்டு சுயநல இருளுக்குள் அடைபட்டுப் போகிறது.

இயற்கையாம் தாயை வெட்டிச் சிதைத்துக் கொள்ளையடிக்கும் இத்தகைய மனிதர்களை இப்பிரபஞ்சத்தின் நீதி ஒருபோதும் மன்னிக்காது. 

  புனிதமான மலைகளை வெட்டிச் சிதைக்கும் நயவஞ்சகர்கள் பிரபஞ்ச விதிகளின்படி இந்த பூமியில் சிதைக்கப்படுவது உறுதி. 

இது எந்தவொரு வன்மத்தின் வெளிப்பாடும் அல்ல; மாறாக, இயற்கையும் பிரபஞ்சமும் தன்னுள் இருக்கும் உயிர்களைக் காக்க நடத்தும் சுழற்சி முறை நீதியாகும். 

 பதிலை வரும் காலகட்டங்களில் தந்தே தீர வேண்டும்.

 இனியாவது இந்த நாட்டின் வளர்ச்சியையும், மக்களின் ஆரோக்கியத்தையும், அடுத்த தலைமுறையின் வாழ்வுரிமையையும் கருத்தில் கொண்டு, மலைகளை வெட்டுவதற்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு வழங்கப்படும் சட்டங்களைக் கடுமையாக்கி, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கிற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

அதிகாரிகள் தங்களின் சுயநலத்தைத் தாண்டி, தங்களின் குடும்ப ஆரோக்கியத்திற்கு நலம் விதைப்பது போல, இந்த மண்ணிற்காகவும், மழைக்காகவும், மனித இனத்தின் ஆரோக்கியத்திற்காகவும் தங்களின் கடமைகளை நேர்மையுடன் செய்ய முன்வர வேண்டும். 

அப்போதுதான் நம் மண்ணும், மலையும், நீரும், காற்றும் தூய்மையடையும்; ஒட்டுமொத்த உயிரினங்களும் ஓர் ஆரோக்கியமான சூழலில் நிம்மதியாக வாழ முடியும்.

 இதை உடனே அரசும், அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில், மக்களின் ஆரோக்கியமான அணுகுமுறையான எதிர்பார்ப்பாக ஏற்றுச் செய்ய வேண்டும்.

www.inmedianews.in

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிஜங்கள்

நம்ம நாய்க்கும் கொரோனா வருமா?– உண்மையா இது

  • June 2, 2025
அவர் வீட்டு நாய்க்கு கொரோனா வந்திருக்கிறதாம்!” என்ற வதந்தி ஒரு பகுதியில் பரவியது. அதைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் தலையாட்டினார்கள். ஆனால் சிலர் பயத்துடன் தங்கள்
Translate »