Couple FriendlyMovie சென்னையில் வேலை தேடி அலையும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் எதார்த்தமான போராட்டத்துடன் தொடங்குகிறது இந்த “கப்புள் பிரண்ட்லி”. இன்ஜினியரிங் முடித்துவிட்டு இன்டீரியர் டிசைனராக சாதிக்கத் துடிக்கும் நாயகன், தன் வாழ்வாதாரத்திற்காகப் பகுதி நேரமாக பைக் ஓட்டுகிறான். ஒரு பயணத்தின் போது அறிமுகமாகும் நாயகி, ஐடி துறையில் வேலை தேடுபவர். தற்செயலாகத் தொடங்கும் இவர்களது அறிமுகம், நாயகிக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்காத ஒரு இக்கட்டான சூழலில், இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது. அங்கிருந்துதான் இவர்களுக்கிடையிலான அந்த அழகான ஈர்ப்பும், ஆழமான காதலும் மலர்கிறது. நாயகனின் திறமையை அடையாளம் கண்டு, “பிரிவியூ” (Preview) என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, நண்பர்கள் மூலம் ரேட்டிங் பெற்றுத் தந்து, அவனது முதல் வேலைக்குக் காரணமாக இருக்கிறாள் நாயகி. ஒரு சிறிய வாஷ்பேஷின் வேலையாக இருந்தாலும் அதைத் தட்டிக்கழிக்காமல் செய்யச் சொல்லி நாயகனை ஊக்கப்படுத்தும் நாயகியின் கதாபாத்திரம், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் வலிமையை உணர்த்துகிறது. தொடர்ந்து நாயகனின் பேச்சுத்திறனை வளர்த்து, அவனைப் பெரிய இடங்களுக்குக் கொண்டு செல்லும் நாயகி, காதலோடு ஒரு வழிகாட்டியாகவும் மிளிர்கிறாள். ஆனால் இவர்களது காதலுக்குச் சாதி அந்தஸ்து என்ற பெயரில் நாயகியின் பெற்றோர் முட்டுக்கட்டை போடுவதும், அவர்களைப் பிரிக்க நினைப்பதும் கதையை ஒரு கனமான இடத்திற்கு நகர்த்துகிறது. ஒரு கட்டத்தில் நாயகிக்கு ஏற்படும் கொடிய நோய், அவர் இன்னும் சில காலமே உயிர் வாழ்வார் என்ற கசப்பான உண்மையை முன்வைக்கிறது. இந்தத் துயரமான சூழலிலும், நாயகியின் நீண்ட நாள் ஆசையான வெளியூர் பயணத்தை நிறைவேற்ற நாயகன் அவளைக் கேரளா அழைத்துச் செல்கிறான். அங்கு அவர்கள் கழிக்கும் அந்த நாட்கள், வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒரு மனிதன் தன் வாழ்வின் இறுதி நிலையில் எதை எதிர்பார்க்கிறான் என்பதற்கான விடை. பணமோ, அந்தஸ்தோ இன்றி, பிடித்தமான ஒரு உயிரின் அன்போடு, “இந்தக் கணம் எனக்குப் போதும்” என்ற மனநிறைவோடு நாயகி மரணத்தைத் தழுவுகிறாள். மரணம் என்பது வெறும் உடல் மறைவு அல்ல, அது ஒரு பசுமையான நினைவலைகளின் தொடக்கம் என்பதை இந்தப் படம் ஆழமாகப் பதிவு செய்கிறது. வாழ்வின் கடைசி நொடியில் நாம் தேடுவது ஒரு ஆழமான அன்பையும், புரிதலையும் மட்டுமே என்பதை “கப்புள் பிரண்ட்லி” ஒரு உன்னதமான காவியமாக நம் முன்னே நிறுத்துகிறது. உடல், பணம், அந்தஸ்து என அனைத்தையும் தாண்டி, உண்மையான காதல் என்பது ஒரு ஆழமான உணர்வு மற்றும் புரிதலில் இருக்கிறது என்பதை இந்தப் படம் மிக அழகாகப் புரிய வைக்கிறது. வெறும் கவர்ச்சியையோ சார்ந்த காதலாக இல்லாமல், ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் தரும் உன்னதமான மதிப்பைப் பேசும் இந்தப் படத்தை, காதலிப்பவர்கள் மற்றும் திருமணமானவர்கள் என அனைவரும் ஒருமுறை பார்க்கலாம்.
திருச்சி ஐயப்பன் திருக்கோவில் துவங்கிய காலம் முதல் இன்றுவரை ஏழை பணக்காரன் உயர்பதவி வகிப்பவர் என சிறப்பு வழி படி தரிசனம் போன்ற பாரபட்சம் இல்லாமல் பல்லாயிரம்
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை