மனித ஆற்றல்

மூளையையும் முடி வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ‘மோப்ப வேதியியல்’!

நம் மூளை என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது தர்க்க ரீதியான சிந்தனைகளும், திட்டமிடல்களும் தான். சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், அன்றாடச் செயல்பாடுகளுக்கு மட்டும்தான் மூளை தேவைப்படுகிறது என நாம் அதை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடுகிறோம். ஆனால், அந்தச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பின்னால் இருந்து இயக்கும், நம் உயிரைக் காக்கும் ஒரு விந்தையான வேதித் தூண்டுதலை—நம் மோப்ப சக்தியைப் (Sense of Smell) பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மூளை என்பது வெறும் தத்துவங்களை மட்டும் யோசிக்கும் இடமல்ல; காற்றில் கரையும் ரகசியங்களை மோப்பம் பிடிக்கும் ஒரு மாபெரும் வேதித் தொழிற்சாலை.

நவீன நரம்பியல் ஆய்வுகளின்படி, மனிதனின் பார்வை, கேட்டல் போன்ற உணர்வுகளை விட, மோப்ப சக்தி மட்டும்தான் மூளையின் உணர்ச்சி மற்றும் நினைவகப் பகுதியான அமிக்டலா (Amygdala) மற்றும் ஹிப்போகாம்பஸோடு (Hippocampus) எவ்விதத் தடையும் இன்றி நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த விந்தையான மோப்ப ஆற்றலை உடலின் சில முக்கிய ஹார்மோன்கள் தான் இயக்குகின்றன. உதாரணமாக, பசி எடுக்கும் போது வயிற்றில் சுரக்கும் ‘க்ரெலின்’ (Ghrelin) ஹார்மோன் மூளையின் மோப்பப் பகுதியைத் தீவிரமாகத் தூண்டி, உணவை அடையாளம் காண உதவுகிறது. அதேபோல் கோபம், பயம் அல்லது பதற்றத்தின் போது சுரக்கும் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் வியர்வை வழியாக வெளியேறி, ஒரு குறிப்பிட்ட வேதிச் சமிக்ஞையை (Chemosignals) வான்வெளியில் பரப்புகின்றன;

இதை எதிரே இருப்பவரின் மூக்கு ஆழ்மனதில் மோப்பம் பிடித்து, அவரது ஆபத்தான மனநிலையைக் கணக்கிட்டு விடுகிறது. காமத்திலும், துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட மனித உடலில் சுரக்கும் ‘பெரமோன்’ (Pheromones) வாசனைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன!

நவீன தோல்யியல் மற்றும் நரம்பியல் ஆய்வுகளின்படி, பிரட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரால்ஃப் பாஸ் தலைமையிலான குழுவினர் மனித உடலின் விசித்திரமான ஒரு நுகர்வுப் புள்ளியைக் கண்டறிந்துள்ளனர். வாசனையை உணரும் ‘ஆல்ஃபாக்டரி ரிசப்டார்கள்’ நம் மூக்கிற்குள் மட்டுமல்லாமல், நம் தலையிலுள்ள மயிர்க்கால்களின் வேர்களிலும் அமைந்திருக்கின்றன. சந்தன மரத்தின் நறுமண மூலக்கூறுகள் இந்த மயிர்க்கால்களில் உள்ள நுகர்வுப் புள்ளிகளை நேரடியாகத் தூண்டும்போது, அது முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து முடி உதிர்வைத் தடுக்கிறது என்று இவ்ஆய்வு நம்பகத்தன்மையுடன் நிரூபிக்கிறது.

தாவரவியல் மற்றும் மனநல-நரம்பியல் அறிவியலாளர்களின் கூற்றுப்படி, காற்றில் கலக்கும் சில குறிப்பிட்ட மரங்களின் நறுமண மூலக்கூறுகள் மனித மூளையின் வேதியியலை நொடியில் மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்டவை. ஜப்பானின் நிப்பான் மருத்துவப் பள்ளிப் பேராசிரியர் டாக்டர் கிங் லி நடத்திய ‘சின்ரின்-யோகு’ (வனக்குளியல்) நரம்பியல் ஆய்வின்படி, பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் வான்வெளியில் வெளியிடும் ‘பைட்டான்சைடுகள்’ என்ற நறுமணத் துகள்களை மனிதர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு பெருமளவு குறைந்து, நரம்பு மண்டலம் சீரடைகிறது.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை மரங்களின் பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து வெளிப்படும் நறுமணம் மனிதனின் அறிவுத்திறனைத் தூண்டும் வல்லமை வாய்ந்தது. எலுமிச்சம்பழத்தில் உள்ள ‘லிமோனின்’ என்ற வாசனை மூலக்கூறு மூக்கின் வழியே மூளையின் உணர்ச்சிப் பகுதிகளை அடையும் போது, அது மகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் தரும் செரட்டோனின் மற்றும் டோபமைன் ஹார்மோன்களை உடனே சுரக்கச் செய்கிறது.

இது சோம்பலை விரட்டி, மூளையின் சிந்திக்கும் ஆற்றலைத் தீவிரப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மூளையின் நரம்புப் பாதைகளைப் பலப்படுத்தவும், நுகரும் வாசனைகளைத் துல்லியமாக மூளைக்குப் பிரித்தனுப்பவும் சில குறிப்பிட்ட உணவு முறைகள் அத்தியாவசியமானவை என்று ஊட்டச்சத்து ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலில் துத்தநாகக் (Zinc) குறைபாடு ஏற்பட்டால் மோப்ப சக்தியும் சுவையும் முற்றிலும் மழுங்கிப்போகும் என்பதால், மூக்கின் நுகர்வு செல்கள் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள பூசணி விதைகள், பாதாம் மற்றும் முழுத் தானியங்கள் பெரிதும் உதவுகின்றன. இதனுடன் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்த அக்ரூட் பருப்புகளும், மூளையை அமைதிப்படுத்தும் வாழைப்பழமும் இந்த மோப்ப வேதியியலைச் சமநிலையில் வைக்கின்றன

சர்வதேச ஆய்வாளர்களின் ஒட்டுமொத்தப் பார்வையும், இயற்கையின் விதியும் நம்மை ஒரு உன்னதமான புள்ளிக்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. நாம் இந்த பூமியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில், முதலில் ஒரு தூய்மையான வாழ்க்கை முறையை (Clean Lifestyle) வாழப் பழக வேண்டும். நாம் வாழும் அந்தத் தூய்மையான வாழ்க்கை முறைதான், நம்முடைய அன்றாடச் சுவாசத்தின் தூய்மையை முழுமையாக உறுதிப்படுத்தும்.

ஏனெனில், நம்முடைய சுவாசம் தூய்மையாக இருந்தால் மட்டும்தான், நம் உடம்பில் உள்ள அனைத்து இரத்த ஓட்டங்களும் எவ்விதத் தொய்வுமின்றித் தூய்மையானதாக மாறும். இரத்த ஓட்டம் தூய்மையடையும் போதுதான் மூளையின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று, நம்முடைய அறிவும் சிந்தனைத் திறனும் கூர்மையடைகின்றன. மனிதனாகிய நம்முடைய அக வாழ்வும், புற வாழ்வும் நாம் சுவாசிக்கும் சூழலையும், நம் சிந்தனையையும் பொறுத்தே வாழ்கிறது; மாறுகிறது.

ஆதலால், இயற்கையோடு இயைந்த ஒரு தூய்மையான சூழலை உருவாக்கி, நம்முடைய மோப்ப சக்தியும், நம்முடைய சுவாசமும் சரியானதாகவும், சீரானதாகவும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நம்மால் எவ்வித நோயுமின்றி ஒரு முழுமையான, ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என்பதே இயற்கையின் பேரறிவும், நவீன அறிவியல் நமக்கு உணர்த்தும் இறுதித் தீர்வும் ஆகும்!

Wisdom News

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மனித ஆற்றல்

யூகிக்க முடியாத மனிதன் ஆற்றல்

ஆழ்மனசு – ரகசியங்களை திறக்கும் திறவுகோல்நாம எல்லாரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயத்தைப் பத்தி பேசப்போறோம். அதுதான் நம்மளோட ஆழ்மனசு!நம்மளோட உணர்வு நிலை மனம் (Conscious Mind). இது
மனித ஆற்றல்

மன அழுத்தத்தை நீக்கும் சமையல் கலை

  • June 1, 2025
சமைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?சமைப்பது ஒரு வகையான தியானம் போன்றது. பொருட்களை வெட்டுவது, கலப்பது, நறுமணம் வருவது போன்ற
Translate »