நிஜங்கள் முக்கிய செய்திகள்

“நான் முதல்வர் ஆனால்…”

“நான் முதல்வர் ஆனால்…” – தமிழகம் மற்றும் புதுச்சேரி தழுவிய பிரம்மாண்ட பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது!
புதிய கனவுகள், புதிய திட்டங்கள், புதிய தமிழகம் என்ற உன்னத நோக்கில், இன் மீடியா (In Media), OY TV மற்றும் அமேஸ் ஐஏஎஸ் அகாடமி (Amace IAS Academy) ஆகியவை இணைந்து நடத்திய “நான் முதல்வர் ஆனால்…”

மாநில அளவிலான பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 14 அன்று திருச்சி தூய வளனார் கல்லூரி (St. Joseph’s College) வளாகத்தில் உள்ள ஜிம் (JIM) அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


​தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள் மற்றும் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய வகையில் இரு பிரிவுகளாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைகளையும், கனவுத் திட்டங்களையும் பேச்சாளர்கள் வெளிப்படுத்தும் ஒரு தளமாக இது அமைந்தது.


இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை டோமி, விக்டர் (NEST School Lalgudi) மற்றும் திரைப்பட இயக்குனர் புருனோ ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்கள் பேசுகையில், “இளம் பேச்சாளர்களின் இந்தத் திட்டங்கள் ஒரு நல்ல தேர்தலுக்கான வலுவான அடித்தளமாகவும், சமூக மாற்றத்திற்கான விதையாகவும் அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


​மாநிலம் முழுவதிலும் இருந்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வான திறமையான பேச்சாளர்கள் மேடையில் மோதினர். இப்போட்டியின் நடுவர்களாக ராஜாத்தி மற்றும் சீனிவாசன் ஆகியோர் செயல்பட்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற அனைத்துப் பேச்சாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள்

பாரபட்சமில்லா பக்தி திருச்சி ஐயப்பன் கோவில் மக்கள் முன்மாதிரி

திருச்சி ஐயப்பன் திருக்கோவில் துவங்கிய காலம் முதல் இன்றுவரை ஏழை பணக்காரன் உயர்பதவி வகிப்பவர் என சிறப்பு வழி படி தரிசனம் போன்ற பாரபட்சம் இல்லாமல் பல்லாயிரம்
செய்திகள் முக்கிய செய்திகள்

“ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு தடுமாறும் நிலை – அரசு இடையிலான நிதி மோதல் காரணம்”

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை
Translate »