நாய் நேசமா? கார்ப்பரேட் லாபமா? – யாரும் சொல்லாத மறைக்கப்பட்ட உண்மை
இன்றைய நகர வாழ்வில் “நாய் வளர்ப்பது அவசியமா?” என்ற கேள்வி எழுகிறது. சிலர் பாதுகாப்பிற்காக, சிலர் பொழுதுபோக்கிற்காக, சிலர் தோழமையாகவே நாய்களை வளர்க்கிறார்கள். ஆனால் இதன் மறுபக்கம் மிகப் பெரிய சிக்கல்களை எழுப்புகிறது.
நாய், குள்ளநரியிலிருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினம். முதலில், அது மனிதனின் தேவைக்காக – போரில் பங்கேற்க, வேட்டையாட, ஊர் காவலுக்காக – உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அந்தக் காலத்தில் நாய் மனிதனுக்கு துணையாகவும், பாதுகாப்பு கருவியாகவும் இருந்தது. ஆனால் காலப்போக்கில், இந்த உறவு தனிப்பட்ட விருப்பத்தைத் தாண்டி, பெரும் வணிகமாக மாறிவிட்டது. இன்று நாய்களைச் சுற்றி ஒரு மிகப்பெரிய தொழில் வலையமைப்பு இயங்குகிறது – மருந்து நிறுவனங்கள், நாய் உணவு உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள், சமூக ஊடக விளம்பரங்கள் என கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் சந்தை உருவாகியுள்ளது.

தெருக்களில் திரியும் நாய்கள் பல்வேறு நோய்களின் ஊற்றாக மாறுகின்றன. அவற்றின் சிறுநீர், மலம் போன்றவை காற்றில் கலக்கும் போது சுவாசக்குழாய் வழியாக மனிதர்களை பாதிக்கின்றன. மிக முக்கியமாக, நாய் கடி – ரேபிஸ் (rabies) என்ற கொடிய நோயின் அபாயத்தை உருவாக்குகிறது. ஒருமுறை பாதிக்கப்பட்டால் உயிர் பிழைப்பது கடினமான இந்த நோய்க்கான அச்சம், சமூகத்தின் மீது பெரும் சுமையாக உள்ளது.

மேலும், கொரோனா காலத்தில் நாய்களிலும் வைரஸ் கண்டறியப்பட்டது என்ற ஆய்வுகள் வெளிவந்தன. நாய்கள் தாங்களாக நோய்களை உருவாக்கவில்லை என்றாலும், ஒரு “நோய் பரவும் கருவி” போல செயல்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்தது. இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்துவது அவசியம் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

இங்கு கவனிக்க வேண்டிய அடிப்படை உண்மை ஒன்று உள்ளது: தெருநாய்களின் முக்கிய பிரச்னை பசி. பெரும்பாலான தெருநாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன. பசியால் தவிக்கும் போது அவை இயல்பாகவே ஆக்ரோஷமாக மாறுகின்றன; மனிதர்களைத் துரத்தவும், கடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அரசின் கடமை, தெருநாய்களுக்கு உணவு, சிகிச்சை, தடுப்பூசி ஆகிய அடிப்படை நடவடிக்கைகளைச் செய்வது.
ஆனால் உண்மையான பிரச்னையை யாரும் பேசவில்லை. பசியால் வாடிய நாய்களுக்கு உதவாமல் விட்டுவிட்டு, இன்று “நாய்களை கட்டுப்படுத்தக் கூடாது” என்று குரல் கொடுப்பவர்கள் உண்மையில் நாய்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் தானா? இல்லை, மருந்து நிறுவனங்கள் மற்றும் நாய் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் இயக்கும் மறைமுக வணிக வலையமைப்பின் ஓர் அங்கமா? என்ற கேள்வி எழுகிறது.

இன்றைய சூழலில் நாய் வளர்ப்பு ஒரு தனிப்பட்ட விருப்பமாக மட்டும் இல்லை; ஒரு பில்லியன் டாலர் வணிக சந்தை ஆக மாறியுள்ளது. நாய் உணவு, மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவமனைகள் – இவை அனைத்தும் நாய்களை மையமாகக் கொண்டு பெரும் வருமானத்தை ஈட்டுகின்றன.
சில சமூக வலைதளங்களில், “நாங்கள் தெருநாய்களை காப்பாற்றுகிறோம், எங்களுக்கு உதவுங்கள்” என்று சொல்லி மக்கள் மனதைப் பயன்படுத்தி நிதி திரட்டுகின்றனர். சிலர் மருந்து நிறுவனங்களிலிருந்து ஆதரவு பெற்று, நாய்களின் நல்ல பண்புகளை மட்டுமே வலியுறுத்தும் பிரச்சாரங்களை நடத்துகின்றனர். ஆனால் நாய்களுக்கு உற்பத்தியாகும் உணவு, அதில் கலக்கும் ரசாயனங்கள், டோபமைன் தூண்டுதல்கள் – இவற்றை யாரும் கேள்வி எழுப்பவில்லை. மனிதன் உண்ணும் உணவே கலப்படமாக இருக்கின்ற போது, நாய்களின் உணவு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை யாரும் ஆராயவில்லை.
இது ஒரு தொடர் சுழற்சி: நாய் → பசி & நோய் → கடி → ரேபிஸ் தடுப்பூசி & சிகிச்சை → மருந்து விற்பனை → நாய் உணவு விற்பனை → மீண்டும் நாய் நோய். இதன் மூலம் ஒரு பெரிய பணப்புழக்கம் உருவாகிறது.
தெருநாய்கள் பிரச்னை நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதற்கு எதிராக சிலர் தெருக்களில் போராட்டம் செய்கின்றனர். அவர்களின் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் குரல் இருக்கிறது என்பதே மக்கள் மத்தியில் வலுவாகப் பேசப்படுகிறது.

அரசின் கடமை – தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. தெருக்களில் குழந்தைகள் அச்சமின்றி விளையாடவும், பொதுமக்கள் பயமின்றி நடமாடவும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
நாய்கள் மனிதனின் நண்பராக இருந்தாலும், இன்றைய சூழலில் அவற்றைச் சுற்றி உருவாகியுள்ள வணிக வலையமைப்பு, பொதுச் சுகாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் பெரிதும் அச்சுறுத்துகிறது. தெருநாய்கள் பசியால் வாடும்போது உதவி செய்யாமல், இன்று அவற்றின் பெயரில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பது, கார்ப்பரேட் வியாபாரத்திற்காக நடத்தப்படும் மறைமுக இயக்கம் என்பதில் சந்தேகமே இல்லை.
அதனால், நாய்களை கட்டுப்படுத்துவது என்பது நாய்களுக்கு எதிரானது அல்ல; மக்களின் நலனை, சமூக சுகாதாரத்தை, எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கை. அரசும் மக்களும் சேர்ந்து, கார்ப்பரேட் வலையமைப்பின் பிடியிலிருந்து விடுபட்டு, உண்மையான தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.




