நிஜங்கள் பிரபஞ்ச ரகசியம்

“666 பிசாசின் எண்ணா? பிரபஞ்சத்தின் உயர் வெளிப்பாடா? ஆய்வாளர்கள் சொல்லும் உண்மை என்ன?”

பல நூற்றாண்டுகளாக 666 என்ற எண்ணை மதங்கள் பயமுறுத்தும் அடையாளமாக உருவாக்கி வைத்தன. அதை “பிசாசின் எண்” என்று சொல்லி மனிதர்களின் மனதில் ஒரு அச்சத்தைப் பதித்தன. 

Bible வெளிப்பாடு (Revelation) 13:18: “இதில் ஞானம் இருக்கிறது; புத்திசாலி யார் அவன் மிருகத்தின் எண்ணை எண்ணிப் பார்ப்பான்; அது மனிதனின் எண்; அதன் எண் 666.”

இங்கு “666” → மிருகத்தின் அடையாள எண் என்று கூறப்பட்டுள்ளது.

வரலாற்று விளக்கம் (ஆய்வு ரீதியாக)

பல அறிஞர்கள் “666” என்பது ரோம பேரரசர் நெரோ (Nero Caesar) என்பவரின் பெயரின் எண் குறியீடு (Hebrew gematria) என்று கருதுகிறார்கள்.

“Nero Caesar” என்ற பெயரை எபிரேய எழுத்துகளில் (נרון קסר) எழுதினால் → எண் மதிப்பு 666 ஆகும்.

அதாவது, இது அடக்குமுறை அரசாட்சி, வன்முறை, மனித சுதந்திரத்தை அடக்கும் சக்தி எனும் குறியீடு.

ஆனால் உலகின் பல்வேறு ஆய்வாளர்கள், குறிப்பாக எண்ணியல் அறிஞர்கள் இந்த எண்ணின் உண்மையான அடையாளத்தை  விளக்குகிறார்கள். அவர்களின் கருத்துப்படி 666 என்பது அழிவுக்கான எண் அல்ல; மாறாக அது பிரபஞ்சத்தின் ஓர் அதிர்வை வெளிப்படுத்தும் எண்.

எண்ணியலின் அடிப்படையில் 6 என்பது அன்பு, குடும்பம், சேவை, பொறுப்பு, சமநிலை ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறது. 

ஒருமுறை வந்தால் அன்பின் விதை, இருமுறை வந்தால் சமநிலையின் வலிமை, மூன்றுமுறை வந்தால் மனித சமுதாயம் முழுவதற்குமான அறிவு, ஞானம், கருணை ஆகியவற்றின் உச்சமாகிறது. 6 + 6 + 6 = 18, 1 + 8 = 9. இதன் இறுதி அதிர்வு 9 ஆகும். 9 என்பது பூரண ஞானம், கருணையின் உச்சி, உலக சிந்தனையின் விரிவாக்கம்.

 உண்மையான அதிர்வின் அடிப்படையில் இது அறிவு, பகுத்தறிவு, மனித முன்னேற்றம் நோக்கி வழிநடத்தும் எண்.

இதேவேளை, தமிழில் “ஆறு” என்று உச்சரிக்கும் போது அதுவே ஒரு அதிர்வை தருகிறது. “ஆ” என்பது அகிலத்தின் விரிவை, பிரபஞ்சத்தின் அகலத்தை குறிக்கிறது. “று” என்பது சுழலும் இயக்கத்தைக் குறிக்கிறது. “ஆ-று” என்று சொல்லும் போது அது பெருமையும் சுழலும் அதிர்வும் சேர்ந்த சக்தி. இது தமிழின் மொழி அதிர்வியல் பார்வையில் மிகுந்த விசேஷம். 6 என்பது தமிழில் ஆறு;

ஆறு என்ற சொல் தண்ணீரின் ஓட்டத்தையும் குறிக்கிறது. ஆறு ஓடும்போது தடை இருந்தாலும் தன்னுடைய பாதையைத் தேடி விடுதலை அடையும். அதுபோல 6 என்ற எண் எந்த அடக்கத்தையும் உடைத்து தனது உண்மையான சிந்தனையை வெளிப்படுத்தும்.

இதனால் மூன்று ஆறுகள் சேர்ந்துள்ள 666 என்பது, பைபிள் கூறிய பயமுறுத்தும் சின்னமல்ல, ஆய்வாளர்கள் சொல்வது போல் மூடத்தனத்தை உடைத்து, பகுத்தறிவை ஊட்டும், ஞானத்தை வெளிப்படுத்தும் பிரபஞ்ச எண். இது ஒரு நாகரிக மறுமலர்ச்சிக்கான அடையாளம். ஆன்மீகத்தின் பெயரில் மனிதனை அடக்கிய மூடநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, பகுத்தறிவு சிந்தனையின் ஒளியால் மனிதனை விடுவிக்கும் ஒரு எண்.

666 என்பது மூடத்தனத்தை ஒழிக்கும் எண், பகுத்தறிவு சிந்தனையை உலகிற்கு அறிவிக்கும் பிரபஞ்சத்தின் உச்ச அதிர்வு.

✍️ 6

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிஜங்கள்

நம்ம நாய்க்கும் கொரோனா வருமா?– உண்மையா இது

  • June 2, 2025
அவர் வீட்டு நாய்க்கு கொரோனா வந்திருக்கிறதாம்!” என்ற வதந்தி ஒரு பகுதியில் பரவியது. அதைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் தலையாட்டினார்கள். ஆனால் சிலர் பயத்துடன் தங்கள்
Translate »