புதிய மாற்றத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்கும் தேர்தல்”
நாம் பெரும்பாலும் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குப்பதிவு நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிக் கவலைப்படுகிறோம். அதன் பிறகு யார் ஆட்சி செய்கிறார்கள், என்னென்ன ஊழல்கள் நடக்கின்றன, லஞ்சம், கையூட்டு, பாலியல் வன்முறை, போதைப்பொருள் வியாபாரம் போன்றவை எவ்வாறு சமூகத்தை சீரழிக்கின்றன என்பதைக் கவனிக்காமல் வாழ்ந்து வருகிறோம். இந்த அலட்சியம் தான் ஒரு நாட்டை மெதுவாக வீழ்ச்சியடையச் செய்கிறது. மதுவால் குடும்பங்கள் சிதறிக் கொண்டிருக்கின்றன; மனைவிகள் துன்பத்தில் வாழ்கின்றனர்; குழந்தைகள் கண்ணீரில் வளர்கின்றனர். விலைவாசி உயர்வு, வரிச் சுமைகள் […]




