நிஜங்கள்

“இருப்பவர்களின் போராட்டத்திற்கு ஒரு நீதி, இல்லாதவர்களின் போராட்டத்திற்கு ஒரு நீதியா?”

சென்னையில் கடந்த பல நாட்களாக, தூய்மை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசிடம் நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

போராடுபவர்கள் மற்றும்
இந்தப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் மீது தடியடி நடத்துவது, பெண்களை அவமரியாதையாக இழுத்துச் செல்வது, அடிப்பது – எந்த விதத்தில் நியாயம்?

பெண்கள், நீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும்போது, அந்தக் குரலைக் கேட்பதற்குப் பதிலாக அதிகாரத்தின் பெயரில் தாக்குதல் நடத்துவது –
சட்ட விரோதமும், மனித உரிமை மீறலும்தான்.

தூய்மை பணியாளர்களுக்கான போராட்டத்திற்கு ஆதரவாக வளர்மதி மற்றும் சக வழக்கறிஞர்கள் பங்கேற்றபோது,
அவர்களை இரவில் கைது செய்து, அடித்தது –
இது சுதந்திர நாடு என்ற பெயருக்கும்,
பெண் சுதந்திரத்திற்கும் கேள்விக்குறியாக இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மற்றும் சட்ட ரீதியாக தீர்க்க வேண்டியவர்கள்.
வன்முறை நடத்துவது,
மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் செயல்.

இது சட்டத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரசே சட்ட விரோதமாக செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?

பெரியார் வலியுறுத்திய பெண் விடுதலை, சமூக நீதி – இதுவா?
பெயருக்கு மட்டும் சமூக நீதியா?

மனித உரிமை சட்டங்கள், பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் விதிகள், மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகள் —
இவை அனைத்தும் இங்கே மீறப்பட்டுள்ளன.

இத்தகைய செயல்கள்,
அரசின் நம்பிக்கையையும் மக்களின் சுதந்திர உணர்வையும் அடிப்படையில் குலைக்கும்.


ஒரு மாற்றத்திற்கான அரசாக, இந்த அரசு உண்மையில் முன்னேற விரும்பினால், நியாயமான முறையில், நீதியான வகையில், போராடுபவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும்.
இது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யாமல், உடனடியாக தீர்வுக்கு வர வேண்டிய அரசின் கடமை.
இதைத் தமிழர் முதல்வர் நேரடியாக முன்னெடுத்து, மக்களின் மனதில் “இவர் கேட்கிறார், தீர்க்கிறார்” என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
இது இன்று தூய்மை பணியாளர்களின் கோரிக்கையாக மட்டுமல்ல, தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

✊✊ கரங்களை இணைத்து, நீதிக்காக, உரிமைக்காக, சமத்துவத்துக்காக — இந்தக் குரலை வலுப்படுத்துவோம்! ✊✊

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிஜங்கள்

நம்ம நாய்க்கும் கொரோனா வருமா?– உண்மையா இது

  • June 2, 2025
அவர் வீட்டு நாய்க்கு கொரோனா வந்திருக்கிறதாம்!” என்ற வதந்தி ஒரு பகுதியில் பரவியது. அதைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் தலையாட்டினார்கள். ஆனால் சிலர் பயத்துடன் தங்கள்
Translate »