முன்னேற்ற பயணம்

பைத்தியக்காரத்தனம்

நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றுவதற்கு உங்கள் சிந்தனையை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் உங்கள் சிந்தனையானது நீங்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள் என்பதை பட்டும் தீர்மானிக்கவில்லை. ஆனால், மிகவும் முக்கியமாக. நீங்கள் நாளை எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறது. உங்களுக்கு வெற்றி வேண்டும் எனில், உங்கள் சிந்தனையை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் “பைத்தியக்காரத்தனம்” என்பதற்கு விளக்கம் என்னவெனில், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ, மிகச் சரியாக அதே விதத்தில் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தபடி, வேறு மாதிரியான விளைவுகளை எதிர்பார்ப்பது ஆகும்! உங்கள் சிந்தனையை நீங்கள் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்! நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதை உங்களால் மாற்ற முடியும் எனில், நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதையும் நீங்கள் மாற்றுவீர்கள். நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை உங்களால் மாற்ற முடியும் எனில், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் மாற்றுவீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களால் மாற்ற முடியும் எனில், உங்களுக்கு என்ன கிடைக்குமோ அதை நீங்கள் மாற்றுவீர்கள். உங்களுக்கு என்ன கிடைக்குமோ அதை உங்களால் மாற்ற முடியும் எனில், நீங்கள் எங்கே சென்று கொண்டு இருக்கிறீர்களோ, அதை நீங்கள் மாற்றுவீர்கள். நீங்கள் எங்கே சென்று கொண்டு இருக்கிறீர்களோ, அதை உங்களால் மாற்ற முடியும் எனில், உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றுவீர்கள்! உங்கள் சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்!

viviztechnologies@gmail.com

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முன்னேற்ற பயணம்

மனிதநேயத்தின் பெருமை

குட்டி கதை: ஒரு மனிதன் கடலோரத்தில் நடந்து சென்றபோது, ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கி இறந்து கொண்டிருந்தன. அவன் ஒவ்வொரு மீனையும் பொறுமையாக எடுத்து மீண்டும்
முன்னேற்ற பயணம்

அகமொழி

வாழ்க்கையில் சில கேள்விகள் நம்மைத் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கும். “என் மனம் இவ்வளவு குழப்பமா?”, “எதையோ தவறவிட்டு வாழ்கிறேன் போல இருக்கிறது”, “என் உறவுகள் ஏன் வெறுமையாக
Translate »