விலக்கப்பட்ட கனியும் விழித்தெழுந்த மனிதனும். The Forsaken Fruit and The Awakened man:
மனித நாகரிகத்தின் தொடக்கம் எங்கே நிகழ்ந்தது என்ற கேள்விக்கு உலகப் பெரும் மதங்கள் காட்டும் ஏதேன் தோட்டத்து ஆதாம்-ஏவாளின் கதை ஒரு மிகச்சிறந்த தத்துவப் பின்னணியைக் கொண்டுள்ளது. விவிலியத்தின்படி, விலக்கப்பட்ட கனி என்பது மனிதனைப் பாவத்தில் வீழ்த்திய ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், தத்துவ மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில் அது மனிதன் தன் அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உன்னதப் பரிணாமத்தின் குறியீடாகும். இயற்கையோடு மிருகங்களைப் போல எவ்விதச் சுய சிந்தனையுமின்றி வாழ்ந்து வந்த மனிதன், ஒரு குறிப்பிட்ட […]




