புதிய அரசியல் பார்வை
2 நிமிட வாசிப்பு
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அராஜகம் ஆரம்பமா?
The expectation of the people of Tamil Nadu is that Chief Minister Vijay will immediately intervene in this allegation against the Honorable Deputy Speaker of the Legislative Assembly, conduct an impartial investigation and take appropriate action.
முழுப் படம்
ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம் என்பது மக்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், புதிய நம்பிக்கையையும், நல்ல மாற்றத்தையும் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இயல்பு.
ஆனால், அந்த நம்பிக்கையின் மீது விழுந்த அடியாகவே திருச்சி மாவட்டம், துறையூரில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. இது கார்த்திக் குமார் என்ற தனிப்பட்ட நபருக்கு விழுந்த அடி மட்டுமல்ல; மாற்றத்தை நம்பி வாக்களித்துத் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திய ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்புக்கும் விழுந்த அடியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி மனு அளிக்கச் சென்ற கார்த்திக் குமார் என்பவரை, துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான மு. ரவிசங்கர் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளித் திருநாளன்று தனது பகுதி மக்கள் குடிநீரின்றிப் படும் அவதியை எடுத்துக்கூறச் சென்ற கார்த்திக் குமாரை, துணை சபாநாயகர் ஆவேசமாகத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் துணை சபாநாயகரின் வற்புறுத்தலின் பேரில் சமாதான வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட கார்த்திக் குமார் வெளியிட்ட மற்றொரு பகிரங்கத் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிட்டு, "அவர் என்னுடைய ஆள்தான். இதனை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன்" என்று துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை மிரட்டியதாக கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.
இதனை பல்வேறு கட்சி தலைவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திமுக ஆட்சிக் காலத்தில் கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களின் கேமராவைப் பறித்து, அவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் செயல்பாட்டுக்குத் தமிழக வெற்றிக் கழகமும், தற்போதைய முதல்வர் விஜய் அவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி மனு அளிக்க வந்த ஒருவரை, மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகரே தாக்கியதாக வெளியாகியுள்ள சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?
தவறு செய்தவர் எந்தப் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதுதான் உண்மையான ஜனநாயகம். இல்லையென்றால், அன்று மற்றவர்களை விமர்சித்ததற்கும் இன்று இவர்கள் ஆட்சி செய்வதற்கும் என்ன வித்தியாசம்?
அன்று மற்றவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கண்டனம் தெரிவித்தவர்கள், இன்று தங்களது ஆட்சியில் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும்போது மௌனம் காக்கப் போகிறார்களா? அல்லது தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா?
மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகர் மீதான இந்தக் குற்றச்சாட்டில் முதல்வர் விஜய் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

புதுப்பிக்கப்பட்டது
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.
விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.