*Dorathy திரைப்படம்: திருச்சி சிவா அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது!"*
மறுக்கப்பட்ட சமத்துவம், மறுக்கப்பட்ட எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்த திருநங்கைகளின் வாழ்க்கை ஒரு சிறிய பார்வையோடு, ஒரு திரைப்படத்தோடு நிறுத்தி விடாமல், அதை ஒரு மீள் பார்வையாக இந்தச் சமூகம் மாற்றம் பெறும் வரை பார்க்க வேண்டும் என்பதே நமது ஆவா!
Anand I Wisdom News I 24.10.2026 நெடுங்காலமாகத் துயரங்கள் அரங்கேறவும், அநீதிகள் நீடிக்கவும், நீதி மறுக்கப்படவும் செய்யும் அந்த இனம்... ஒரு மாற்றத்திற்கான சூழல் ஏற்படுகிறதா அல்லது ஏற்படும் வகையில் காலச்சூழல் அமையும் வரை சில விஷயங்களை நாம் பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
அப்படித் தான் 'தூரத்தில்' திரைப்படமும் நம்மைப் பேச வைக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு முன்பே இந்த இன மக்களுக்கான ஒரு பெரிய மாற்றத்தை இந்தச் சமூகத்திற்கு அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்! அது எத்தனை பேருக்குக் கடந்துபோயிருக்கும் அல்லது தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. அப்படித் தெரியாதவர்களுக்கும், தெரிந்திருந்தாலும் இப்போதும் அதை உரக்கப் பேச வேண்டிய சூழலும் அவசியமும் இருக்கிறது என்ற கருத்தைத்தான் இந்த 'தூரத்தில்' திரைப்படம் மீண்டும் நினைவுபடுத்த வைக்கிறது.
மறுக்கப்பட்ட சமத்துவம், மறுக்கப்பட்ட எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்த திருநங்கைகளின் வாழ்க்கை ஒரு சிறிய பார்வையோடு, ஒரு திரைப்படத்தோடு நிறுத்தி விடாமல், அதை ஒரு மீள் பார்வையாக இந்தச் சமூகம் மாற்றம் பெறும் வரை பார்க்க வேண்டும் என்பதே நமது ஆவா! அதன் அடிப்படையில் தான் 'தூரத்தில்' திரைப்படத்தைப் பற்றி இரண்டு பதிவுகள் நாம் பதிவிட்டு இருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக, இந்தப் படத்திற்கும் எல்லாம் ஒரு முன்னோடியாகத் திருநங்கைகளின் வாழ்க்கையை வெளிச்சமாக்கியவர் என்று சொல்வதோடு, அவர்களுக்கான மாண்பைக் குறித்துப் பாராளுமன்றத்திலே பேசிய இவரையும் நாம் மறக்க முடியாது.
ஏன் அவரை மறக்க முடியாது? அவர் பாராளுமன்றத்தில் என்ன பேசினார்?
2014ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இந்தத் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என். சிவா அவர்கள் ஆற்றிய உரை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக உணர்ச்சிகரமான ஒன்றாகும்.
அவர் தனது உரையில், "நமது சமூகத்தில் பிறப்பால் அல்லது அடையாளத்தால் ஒரு தரப்பினர் காலம் காலமாக அவமானப்படுத்தப்பட்டு, வீடுகளிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் துரத்தப்படுகிறார்கள். அவர்கள் கேட்பது சலுகை அல்ல; சக மனிதனாக வாழ்வதற்கான உரிமை! ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அவனது பாலின அடையாளம் தீர்மானிக்கக் கூடாது. இத்தனை காலம் 'அரவாணி' என்றும் இழிவான சொற்களாலும் அழைக்கப்பட்டு விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட இந்த மனிதர்களுக்கு 'திருநங்கை' என்ற கௌரவமான அடையாளத்தையும், சுயமரியாதையையும் நாம் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசமைப்பு வழங்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இது ஒரு பரிதாபக் கருணை அல்ல, நாட்டின் கடமை!" என்று மிக ஆணித்தரமாகத் தனது குரலைப் பதிவு செய்தார்.
அவரது இந்த உணர்வுபூர்வமான உரையின் விளைவாகவே, பாராளுமன்ற வரலாற்றில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரின் மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
' *அரவாணி'* என்ற சொல்லிலிருந்து ' *திருநங்கை'* என்ற பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமானது; அவர்களுக்கென்று தனி நல வாரியங்களும் சட்டப் பாதுகாப்புகளும் அமைக்கப்பட்டன.
சமூகத்தில் புதைந்துக கிடக்கும் அநீதிகளைச் ஒருசில விவாதங்களில் பேசி முடித்துவிட முடியாது. 'தூரத்தில்' திரைப்படமும், திருச்சி சிவா அவர்களின் குரலும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்—திருநங்கைகளுக்கான சமத்துவமும் மாண்பும் சமூகத்தில் முழுமையாகக் கிடைக்கும் வரை நமது விவாதங்களும் குரல்களும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்!