புதிய அரசியல் பார்வை
5 நிமிட வாசிப்பு
அறிவை வளர்க்க வேண்டிய புத்தகங்களே சர்ச்சையில்!
What knowledge is gained by reading a book? Its Today, it has become a matter of concern that questions are being raised about the quality of books in government libraries. In particular, the controversy over the purchase of books in the newly opened Periyar Arivulagam Library i…
முழுப் படம்
Wisdom News I Anand
தமிழகத்தை உலுக்கும் புத்தகக் கொள்முதல் முறைகேடு!வாசிப்பு... வாசிப்பு... வாசிப்பு!
மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும் பள்ளி, கல்லூரிகளிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர் – மாணவர் உறவை மேம்படுத்தவும், இளைஞர்களிடம் அறிவார்ந்த சிந்தனையை உருவாக்கவும் புத்தக வாசிப்பு அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. இதற்காகத்தான் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், இங்கே ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது. நூல்களை வாசிக்க வேண்டும் என்று சொல்லும் நாம், எந்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றும், ஏன் அந்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றும் மக்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோமா?
ஒரு நூலை வாசிப்பதால் என்ன அறிவு கிடைக்கிறது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையானவையா? அதன் ஆசிரியர் யார்? அந்த நூல் சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் எத்தகைய சிந்தனையை வழங்குகிறது? இத்தகைய கேள்விகளுக்கான புரிதல் வாசிப்புப் பழக்கத்தைவிடவும் முக்கியமானது.இல்லையென்றால், புத்தகம் படிக்க வேண்டும் என்ற பொதுவான அறிவுரையை மட்டும் கொடுத்துவிட்டு, கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாசித்துவிடுவது அறிவு வளர்ச்சியாகிவிடுமா?
இன்று அரசு நூலகங்களுக்குள் இடம்பெறும் புத்தகங்களின் தரம் குறித்தே கேள்விகள் எழுந்திருப்பது கவலைக்குரியதாக மாறியுள்ளது.குறிப்பாக, கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் எழுந்துள்ள சர்ச்சை தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய கேள்விகள்தான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.
நவம்பர் 6ஆம் தேதி சிந்தை இணையதளத்தில் வெளியான தனது கட்டுரையில், பெரியார் அறிவுலகம் நூலகத்தில் இடம்பெற்றிருந்த புத்தகங்களின் தரம், ஆசிரியர்களின் உண்மைத்தன்மை, வெளியீட்டாளர்களின் நம்பகத்தன்மை, புத்தகங்களின் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
குறிப்பாக, அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்ட சுமார் 1,800 புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், பல புத்தகங்களில் அடிப்படை வரலாற்றுப் பிழைகள் இருப்பதையும், சில நூல்களின் உள்ளடக்கம் நம்பகத்தன்மையற்றதாக இருப்பதையும் எடுத்துரைத்தார்.
உதாரணமாக, தமிழின் முக்கியமான அறநூலான நாலடியாரை ஒரு தனிப்பட்ட புலவர் எழுதியதாகச் சித்தரித்திருப்பது, வரலாற்று உண்மைகளுக்கு முரணான தகவல்கள், அறியப்படாத ஆசிரியர்களின் பெயர்களில் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுமார் 300 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் விலை ரூ.1,445 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதையும் கேள்விக்குள்ளாக்கினார்.இவ்வளவு அதிகமான விலைக்கு இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டதன் அடிப்படை என்ன? அவற்றின் உள்ளடக்கத்தை யார் பரிசோதித்தார்கள்? பரிந்துரைக் குழு எதன் அடிப்படையில் இந்த நூல்களைத் தேர்வு செய்தது? செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புத்தகங்களா இவை? என்ற கேள்விகளும் விவாதத்தைப் பெரிதாக்கின.இந்தக் கேள்விகள் இலக்கிய உலகத்தோடு நின்றுவிடாமல், அரசியல் களத்திலும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
அகல்விளக்கு பதிப்பகம் மட்டுமின்றி, பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்தன.
குறிப்பாக, சில புத்தகங்களில் ஆசிரியர்களின் பெயர்கள் புனைப்பெயர்களாக இடம்பெற்றிருப்பது, ஒரே ஆசிரியரின் பெயரில் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது, மொழிப் பிழைகள் மற்றும் வரலாற்றுப் பிழைகள் இருப்பது போன்றவை ஊடகங்களில் விவாதப் பொருளாகின.இது வெறும் பதிப்பகத்தின் வெளியீட்டுத் தரம் குறித்த விமர்சனமா அல்லது அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் திட்டமிட்ட முறைகேடு நடந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
ஒரு புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம்.
அதில் தவறில்லை. ஆனால், அந்த விலைக்கு ஏற்ற உள்ளடக்கம் இருக்கிறதா? அந்தப் புத்தகத்தை எழுதியவர் யார்? அவர் உண்மையில் அந்தத் துறையில் அறிவும் ஆய்வும் கொண்டவரா? நூலின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டுள்ளனவா? இவற்றை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?குறிப்பாக, அரசுப் பணத்தில் புத்தகங்கள் வாங்கப்படும்போது இந்தப் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.
நியூஸ் தமிழ் ஊடகம் அகல்விளக்கு பதிப்பகத்தின் பொறுப்பாளர் மோகனை நேரில் சந்தித்து நேர்காணல் செய்தது. அந்த நேர்காணலில் அகல்விளக்கு பதிப்பகம் செயல்படுவது உண்மை என்றும், அதன் பொறுப்பாளர் தாமே என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேர்காணலில், தங்களுடைய பதிப்பகத்தின் புத்தக விற்பனை சுமார் ரூ.17 லட்சம் அளவில்தான் நடைபெற்றுள்ளதாகவும், மற்ற புத்தகங்களின் விற்பனை விவரங்கள் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், புனைப்பெயர்களில் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது, விஜய், த்ரிஷா போன்ற பெயர்களை ஒத்த பெயர்களில் ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது, புத்தகங்களின் உள்ளடக்கத்தில் காணப்படும் பிழைகள் போன்ற கேள்விகளுக்கு அவர் அளித்த விளக்கங்கள் பலருக்கும் திருப்தியளிக்கவில்லை. புனைப்பெயரில் எழுதுவது எழுத்தாளர்களின் இயல்பான நடைமுறை என்றும், இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்ததாக நேர்காணலில் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் வழக்கறிஞர் பதிலளிப்பார் என்ற அவரது அணுகுமுறையும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்தப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் முந்தைய திமுக ஆட்சியின் காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டினர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் புகார் அளித்தார்.
இதற்குப் பதிலடியாக, திமுக தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், புத்தகக் கொள்முதல் நடைமுறைகள் முறையான குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடைபெற்றதாகவும் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். பாரதி உள்ளிட்ட திமுக தலைவர்களும் இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கினர். புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைகள், வங்கிப் பணப் பரிமாற்றங்கள், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள், அதிகாரிகளின் பொறுப்பு உள்ளிட்ட விவரங்களை ஏன் முழுமையாக வெளியிடவில்லை? தவறு செய்தவர்கள் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? என்பன போன்ற கேள்விகளை எழுப்பினர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகத் தொடர்வோம் என்றும் எச்சரித்தனர்.
ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வதால் மட்டும் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்துவிடாது. உண்மையில் புத்தகங்களைப் பரிந்துரை செய்தவர்கள் யார்? அவற்றை இறுதியாகத் தேர்வு செய்தவர்கள் யார்? கொள்முதல் உத்தரவு வழங்கிய அதிகாரிகள் யார்? எவ்வளவு தொகை யாருக்குச் சென்றுள்ளது? இதற்கான ஆவணங்கள் என்ன சொல்கின்றன? என்பதற்கெல்லாம் வெளிப்படையான பதில் கிடைக்க வேண்டும்.
இந்த நிலையில், நவம்பர் 11ஆம் தேதி இந்த விவகாரத்தில் முக்கியமான திருப்பமாக, மதுரை அமர்வு உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும், அகல்விளக்கு பதிப்பகம், அதன் உரிமையாளர் மோகன் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நூலகங்களில் உள்ள சந்தேகத்திற்குரிய புத்தகங்களைக் கண்டறிந்து அவற்றை வாசகர்களுக்குக் கிடைக்காத வகையில் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இது பெரியார் அறிவுலகம் நூலகத்துடன் மட்டும் முடிந்துவிடக் கூடாது. தமிழகத்தின் அனைத்து அரசு நூலகங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வுக் குழுவை அமைத்து, அவற்றின் வரலாற்று உண்மைத்தன்மை, மொழித் தரம், ஆசிரியர்களின் நம்பகத்தன்மை, அறிவியல் அடிப்படை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால், ஒரு தவறான புத்தகம் ஒரு தனிநபரின் வாசிப்போடு முடிந்துவிடுவதில்லை. அது நூலகத்தில் இடம்பெறும்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் சிந்தனையைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக வரலாற்றைத் தவறாகப் பதிவு செய்வதும், உண்மையற்ற தகவல்களை அறிவாக முன்வைப்பதும் எதிர்காலத் தலைமுறையின் புரிதலையே சிதைத்துவிடும்.
தமிழகம் இப்போதுதான் கல்வி, அறிவு, வாசிப்பு என அடுத்தடுத்த நிலைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அறிவை வளர்க்க வேண்டிய புத்தகங்களே தவறான தகவல்களையும், நம்பகத்தன்மையற்ற உள்ளடக்கங்களையும் கொண்டிருந்தால் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக அரசின் முன் இப்போது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
மக்களுக்கான ஆட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் இந்த அரசு, அறிவையும் கல்வியையும் பாதிக்கும் இத்தகைய விவகாரத்தில் எவ்வாறு செயல்படப் போகிறது? முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமா? தமிழகத்தின் அனைத்து அரசு நூலகங்களிலும் உள்ள புத்தகங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமா?
இவைதான் இன்று தமிழக மக்களின் எதிர்பார்ப்பும், கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் எழுப்பும் முக்கியமான கேள்விகளுமாகும்.Wisdom News

புதுப்பிக்கப்பட்டது
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.
விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.