செய்திகள்
2 நிமிட வாசிப்பு
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காலை இழந்த பிரின்ஸ்டன் மீது கொடூரத் தாக்குதல்!
Is there no security for the life of the person who lost his leg in the protest today? Is law and order truly being maintained in Thoothukudi? The question has arisen. The Anti-Sterlite Thoothukudi District People's Federation has urged that Princeton should get justice and that…
முழுப் படம்
தூத்துக்குடியில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காலை இழந்த பிரின்ஸ்டன் மீது கொடூரத் தாக்குதல்!
2018 மே 22 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தனது ஒரு காலை இழந்த பிரின்ஸ்டன், தற்போது மீண்டும் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர தேவாலயம் சென்று பிரார்த்தனை முடித்து வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த பிரின்ஸ்டனை, தூத்துக்குடி BMC பள்ளி அருகே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரது வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியதுடன், சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பிரின்ஸ்டனின் மண்டை உடைந்து, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால் தனது காலை இழந்து வாழ்நாள் பாதிப்பைச் சுமந்து வரும் ஒருவர், குடும்பத்தினருடன் வீடு திரும்பும்போது இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தூத்துக்குடியின் சட்டம் – ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காண வேண்டும், தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பிரின்ஸ்டனுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சையும் உரிய பாதுகாப்பும் வழங்குவதுடன், குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அப்போராட்டத்தில் காலை இழந்த ஒருவரே மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் காலை இழந்தவருக்கு இன்று உயிருக்கும் பாதுகாப்பு இல்லையா? தூத்துக்குடியில் சட்டம் – ஒழுங்கு உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரின்ஸ்டனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
— ஜான் பி. ராயன், சமூகச் செயற்பாட்டாளர்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
WISDOM NEWS | Seeking Truth. Sharing Wisdom.

புதுப்பிக்கப்பட்டது
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.
விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.