A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 3 நிமிட வாசிப்பு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் ஐந்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்

This five-day training camp is designed to unleash the potential of students through experiences and hands-on activities, away from the classroom learning method. Each day includes yoga, reading, skill development exercises, group activities, games, and team building exercises.

NEW_DESK
செயின்ட் ஜோசப் கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் ஐந்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் முழுப் படம்
மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதிகளையும் தொழில்முறைத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், திருச்சி செயின்ட் ஜோசா் கல்லூரி ஐந்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாமை நவம்பர் 11 முதல் 15 வரை நடத்துகிறது. இப்பயிற்சி முகாமில் 140 மாணவர்கள் பங்கேற்றுப் பயிற்சி பெறுகின்றனர்.

இம்முகாமின் தொடக்க விழாவிற்குக் கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமை தாங்கி ஆசிர் அளித்துத் தொடங்கிவைத்தார்.  கல்லூரி முதல்வரும் இம்முகாமின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான அருள்முனைவர் கு. ஆரோக்கியம் முன்னிலை வகித்துத் தொடக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில்   கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை இலக்குகளாக வேலைவாய்ப்பையும் ஆராய்ச்சியையும் தமது பணிக்காலத்தில் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்விரு துறைகளும் ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தையும் செயல்திறனையும் அளவிடுவதற்கான முக்கியக் குறியீடுகளாக விளங்குகின்றன என்றார். கடந்த ஆண்டு மூன்று நாள் பயிற்சி முகாமாகத் தொடங்கப்பட்ட இம்முயற்சி, மாணவர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு, நடப்பாண்டில் ஐந்து நாள் முழுமையான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார்.

இம்முகாமைச் சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து ஆதரவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் வழங்கிவரும் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் த. குமார் அவர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். ஒருங்கிணைப்புக் குழுவினருடன் இணைந்து அவர் வழங்கிவரும் வழிகாட்டுதல் இம்முகாமின் வெற்றிக்குப் பெரும் துணையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) திருச்சி மண்டலத் துணைத் தலைவரும், கல்லூரியின் சிறப்புமிக்க முன்னாள் மாணவரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான திரு. ஆனந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதிலும், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் வாயிலாக மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்ப்பதிலும் அவர் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டப்பட்டன.

கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு இயக்குநர் முனைவர் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். மாணவர்களை வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாக உருவாக்குவதில் இத்தகைய பயிற்சி முகாம்கள் ஆற்றும் பங்களிப்பை எடுத்துரைத்தார். முகாமின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முனைவர் விமல் ஜெரால்டு நன்றியுரையாற்றினார். விழாவில் பங்கேற்ற கல்லூரி நிர்வாகத்தினர், சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பயிற்சி முகாமின் சிறப்பம்சங்கள்
செயின்ட் ஜோசப் கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் ஐந்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்

வழக்கமான வகுப்பறைக் கற்றல் முறையிலிருந்து மாறுபட்டு, அனுபவங்களின் வழியாகவும் நேரடிச் செயல்பாடுகளின் வாயிலாகவும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் இவ்வைந்து நாள் பயிற்சி முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் யோகா, வாசிப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், குழுச் செயல்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் குழு ஒருங்கிணைப்புப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பு வளநபர்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சி அமர்வுகள் நடைபெறுகின்றன. மாணவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை, தகவல் தொடர்புத் திறன், சிந்தனைத் திறன் மற்றும் குழுவாகச் செயல்படும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் கலை நிகழ்ச்சிகள், திரைப்படத் திறனாய்வுகள் மற்றும் பல்வேறு குழு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

மேலும், மாணவர்கள் வேலைவாய்ப்புத் தேர்வுகளையும் நேர்முகத் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை வழங்கும் வகையில், திறனறித் தேர்வுகள், குழு விவாதங்கள், தொழில்நுட்ப நேர்முகத் தேர்வுகளுக்கான ஒத்திகைகள் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த நேர்முகத் தேர்வு ஒத்திகைகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.

உண்டு உறைவிடப் பயிற்சி முறையில் மாணவர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து கற்கும் வாய்ப்பைப் பெறுவதால், அவர்களிடையே தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, தன்னொழுக்கம், குழு மனப்பான்மை, பிறருடன் இணக்கமாகப் பழகும் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய பண்புகள் வளர்வதற்கும் இம்முகாம் வழிவகுக்கிறது.

கல்விசார் தகுதிகளைப் பெற்றிருப்பதோடு நின்றுவிடாமல், தொழில்முறைத் திறன்கள், தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன் மற்றும் பணிச்சூழலுக்குத் தேவையான நடைமுறை ஆற்றல்கள் ஆகியவற்றையும் ஒருங்கே பெற்ற இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற கல்லூரியின் தொலைநோக்குப் பார்வையை இம்முகாம் வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அகத்தர உறுதிப்பிரிவு இயக்குநர் முனைவர் வி. ஜூட் நிர்மல் மற்றும் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். தொடக்க விழாவின் நிறைவில் கல்லூரி நிர்வாகத்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்கள் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஐந்து நாள் பயிற்சி முகாமின் நிகழ்வுகள் தொடங்கின.

புதுப்பிக்கப்பட்டது

தொடர்புடைய தலைப்புகள்
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

*தமிழ்நாட்டில் பொதுத்துறை நலவாழ்வுச் சேவை பராமரிப்பை வலுப்படுத்தவும், தனியார் நலவாழ்வுச் சேவைகளை ஒழுங்குபடுத்தவும், வலியுறுத்தல்*

*Two-day State Level Skill Development Workshop held at Tiruchirappalli Leyte Commission on 13–14 Novemb…

5 நிமிட வாசிப்பு
செய்திகள்

தாத்தா சொத்தில் தந்தைக்கு கிடைக்கும் பங்கை கேட்க பேரனுக்கு உரிமை இல்லை: உச்சநீதிமன்றம்

தாத்தாவின் சொத்தைப் பாகப் பிரிவினை செய்யும்போது தந்தைக்குக் கிடைக்கும் சொத்தில் பங்கு கேட்க பேரனுக்கு உர…

1 நிமிட வாசிப்பு
செய்திகள்

அறிவியலால் ஒன்றிணைவோம்! அமைதியான உலகை உருவாக்குவோம்!

உலக அறிவியல் தினம் - அமைதி மற்றும் வளர்ச்சிக்கான 2026: அறிவியல் ஒத்துழைப்பின் மூலம் பொது அடித்தளம்Dr. அ.…

3 நிமிட வாசிப்பு