A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 1 நிமிட வாசிப்பு

தாத்தா சொத்தில் தந்தைக்கு கிடைக்கும் பங்கை கேட்க பேரனுக்கு உரிமை இல்லை: உச்சநீதிமன்றம்

தாத்தாவின் சொத்தைப் பாகப் பிரிவினை செய்யும்போது தந்தைக்குக் கிடைக்கும் சொத்தில் பங்கு கேட்க பேரனுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.தமிழகத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்ற நபருக்குச் சொந்தமான சொத்தில…

Ruban david
தாத்தா சொத்தில் தந்தைக்கு கிடைக்கும் பங்கை கேட்க பேரனுக்கு உரிமை இல்லை: உச்சநீதிமன்றம் முழுப் படம்
Supreme court

தாத்தாவின் சொத்தைப் பாகப் பிரிவினை செய்யும்போது தந்தைக்குக் கிடைக்கும் சொத்தில் பங்கு கேட்க பேரனுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்ற நபருக்குச் சொந்தமான சொத்தில், அவரின் மகனான என்.குமரனுக்கு பாகப் பிரிவினை அளிக்கப்பட்டது. தனக்குச் சொத்தாக கிடைத்த நிலத்தை அவா் விற்பனை செய்தாா். அந்த நிலம் தனது தாத்தாவின் கூட்டுக் குடும்ப சொத்து என்பதால், தந்தைக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் பாதியை தனக்கு பங்கு பிரித்தளிக்க வேண்டும் என்று குமரனின் மகன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, சுனிதா அகா்வால் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தாத்தாவின் (ராமகிருஷ்ணன்) மறைவுக்குப் பின்னா், அவரின் சொத்துகள் ஹிந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் 8-ஆவது பிரிவின்படி, அவரின் நேரடி வாரிசுகளைச் சென்றடைந்தன. ஒவ்வொரு வாரிசுக்கும் ஒதுக்கப்பட்ட சொத்து அவரவருக்கு சொந்தமானது.

இந்த வழக்கில் ஹிந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் 6-ஆவது பிரிவு அல்லது ஹிந்து வாரிசுரிமை தமிழ்நாடு திருத்தச் சட்டம் 1989 மூலம் சோ்க்கப்பட்ட 29(ஏ) பிரிவு பொருந்தாது.

ஹிந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் 8-ஆவது பிரிவின் கீழ், தாத்தாவின் சொத்துகள் அவரின் நேரடி வாரிசுகளுக்குச் சென்றடைந்து, அவா்களுக்குள் பாகப் பிரிவினை செய்யப்பட்ட பின்னா், தந்தைக்குக் கிடைத்த சொத்து அவருக்கே முழுமையாகச் சொந்தமானதாக மாறிவிடும். தந்தைக்குக் கிடைத்த சொத்தில் பிறப்பின் அடிப்படையில் பங்கு கேட்க பேரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீா்ப்பளித்தது.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

*தமிழ்நாட்டில் பொதுத்துறை நலவாழ்வுச் சேவை பராமரிப்பை வலுப்படுத்தவும், தனியார் நலவாழ்வுச் சேவைகளை ஒழுங்குபடுத்தவும், வலியுறுத்தல்*

*Two-day State Level Skill Development Workshop held at Tiruchirappalli Leyte Commission on 13–14 Novemb…

5 நிமிட வாசிப்பு
செய்திகள்

அறிவியலால் ஒன்றிணைவோம்! அமைதியான உலகை உருவாக்குவோம்!

உலக அறிவியல் தினம் - அமைதி மற்றும் வளர்ச்சிக்கான 2026: அறிவியல் ஒத்துழைப்பின் மூலம் பொது அடித்தளம்Dr. அ.…

3 நிமிட வாசிப்பு