A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

தமிழ்நாடு 2 நிமிட வாசிப்பு

உங்கள் அறிவையும் ஆழமான சிந்தனைகளையும் எழுத்தில் பதிவு செய்து, நூலாக உலகறியச் செய்யும் மாபெரும் வாய்ப்பு!*

WISDOM NEWS ONLINE MEDIA & WISDOM TV YOUTUBE CHANNELஇணைந்து வழங்கும்மாபெரும் அறிவியல் மற்றும் சூழலியல் *கட்டுரைப் போட்டி!* போட்டிக்கான தலைப்புகள்1. *மலையும் மனிதனும் – மலையின் மகத்தான ஆற்றல்!* மலைகளின் தோற்றம் மற்று…

NEW_DESK
A great opportunity to record your knowledge and deep thoughts in writing and make them known to the world as a book!* முழுப் படம்
WISDOM NEWS ONLINE MEDIA & WISDOM TV YOUTUBE CHANNEL
இணைந்து வழங்கும்

மாபெரும் அறிவியல் மற்றும் சூழலியல் *கட்டுரைப் போட்டி!* 

போட்டிக்கான தலைப்புகள்

1. *மலையும் மனிதனும் – மலையின் மகத்தான ஆற்றல்!* 

மலைகளின் தோற்றம் மற்றும் வரலாறு, புவியியல் அமைப்பு, பாறைகள், கனிமங்கள், மலைவாழ் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நீராதாரங்கள், மழை மற்றும் காலநிலை உருவாக்கத்தில் மலைகளின் பங்கு; அவற்றில் பொதிந்துள்ள இயற்கை மற்றும் உயிரியல் ஆற்றல்கள் மனிதன், பிற உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்.

2. *கடலும் மனித வாழ்வும் – நீலப் பேராற்றலின் அதிசயங்கள்!* 

கடல்களின் தோற்றம் மற்றும் வரலாறு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன் வகைகளின் பன்முகத்தன்மை, கடல் நீரோட்டம், அலை, வெப்பம், வேதியியல் மற்றும் உயிரியல் ஆற்றல்கள்; கடல் உயிரினங்கள் வெளியிடும் ஆக்சிஜன், கடலின் உணவுச் சங்கிலி, மனித உடல்நலம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் கடலின் தாக்கங்கள்.

3. *தாவரங்களும் மனித வாழ்வும் – உயிர்களின் ஆதார சக்தி!* 

தாவரங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வரலாறு, தாவர வகைகள், ஒளிச்சேர்க்கை, சூரிய ஆற்றலை உணவாக மாற்றும் செயல்முறை, ஆக்சிஜன் வெளியீடு, மருத்துவத் தாவரங்கள், அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள்; மனித உடல், பிற உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் தாவரங்களின் உயிரியல் ஆற்றல்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்.

பரிசுகள் – ஒவ்வொரு தலைப்பிற்கும் *தனித்தனி 3 பரிசுகள்.* 

🥇 முதல் பரிசு – ரூ. *5,000* 
🥈 இரண்டாம் பரிசு – ரூ. *3,000* 
🥉 மூன்றாம் பரிசு – ரூ. *2,000* 


 *மொத்தம் 9 பரிசுகள்!* 

*சிறந்த வெற்றிக் கட்டுரைகள் நூலாக வெளியிடப்படும்.* 
பங்கேற்கும் அனைத்து கட்டுரைகளும் ஆசிரியர்களின் புகைப்படத்துடன் *WISDOM NEWS* இணைய ஊடகத்தில் வெளியிடப்படும்.

 *போட்டி விதிமுறைகள்* 

1. வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம்.

2. கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

3. A4 தாளில் அதிகபட்சம் 3 பக்கங்கள் மட்டுமே எழுத வேண்டும்.

4. கட்டுரை தமிழில், சொந்தச் சிந்தனையுடனும் சொந்த எழுத்திலும் இருக்க வேண்டும்.

5. இணையதளங்களில் இருந்து நகலெடுத்தல், பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.

6. இயற்கை வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலன் குறித்த சிந்தனைகள் இடம்பெற வேண்டும்.

7. கட்டுரையுடன் புகைப்படம், பெயர், வயது, ஊர், கல்வித் தகுதி மற்றும் தொடர்பு எண்ணை இணைக்க வேண்டும்.

8. Word அல்லது PDF வடிவில் அனுப்ப வேண்டும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

 *கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 09.01.2027* 

தொடர்புக்கு

 ஜெயச்சந்திரன் : 9943535796
9384759321


 *உங்கள் சிந்தனையே உங்கள் படைப்பு!* 
 *உங்கள் படைப்பே எதிர்காலத்திற்கான அறிவுச் சொத்து!*

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

சமத்துவமும் சமூக நீதியும் – கிறித்தவச் சிந்தனையாளர்கள் ஆலோசனை

சமத்துவ கிறித்தவ சிந்தனையாளர் கூட்டம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது04.11.2026 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு …

1 நிமிட வாசிப்பு