A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பு

"பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம்... தவெகவிடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்!" – மு.க. ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

The Tamilaga Vettri Kazhagam (TVK) and the political landscape would certainly not have anticipated such a sharp video statement from former Chief Minister and DMK leader M.K. Stalin. The severe allegations he has leveled against the TVK—which is currently in power in Tamil Nadu…

NEW_DESK
"பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம்... தவெகவிடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்!" – மு.க. ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு! முழுப் படம்

Wisdom News I 30.10.2026

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடமிருந்து  இப்படி ஒரு காட்டமான வீடியோ பதிவை தவெக அரசும் அரசியல் களமும் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு மீது அவர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளும், அதில் அவர் பயன்படுத்தியுள்ள காரசாரமான வார்த்தைகளும் தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.  
மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறிய அவர், முக்கியமாக, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம், தவெகவிடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய ஆபத்தான நிலைமை இருக்கிறது" என்று ஆவேசமாகச் சாடினார். மாநிலத்தில் நடக்கும் பாலியல் குற்றப் பின்னணியில் சரிபாதி அளவுக்கு ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற கடுமையான குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில், தவெக கட்சி நிர்வாகி ஒருவர் போதைப்பொருட்களை (மெத்) மொத்தமாகத் தயாரித்து உலகம் முழுவதற்கும் அனுப்பி வைக்கிறார் என்ற திடுக்கிடும் தகவலைக் கூறி, போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணம் தவெகவின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பி அதிர வைத்துள்ளார்.
 மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கோ, கேள்விகளுக்கோ நேரடியாகப் பதில் அளிக்காமல் ஒதுங்கி ஓடுவதாகவும் விமர்சித்தார். தேனி மாவட்டச் சிறையிலிருந்து ஒரே இரவில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, சிறைச்சாலைகளுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலைக்கு அரசு இயந்திரம் சீரழிந்துவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.தவெக அரசை கடுமையாகச் சாடிய அவர், "சொந்த புத்தியும் இல்லை; சொல் புத்தியும் இல்லை" எனக் குறிப்பிட்டதோடு,  இந்த ஆட்சி ஒரு "சோப்ளாங்கி அரசு" என்றும் வர்ணித்தார். 
தற்போது அரிசி மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியுமா என்று ஏங்கும் நிலைக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும் கவலை தெரிவித்தார். 
நிறைவாகப் பேசிய மு.க. ஸ்டாலின், அக்டோபர் 31-ஆம் தேதி திமுக மகளிரணி நடத்தவுள்ள இந்த மாவட்டத் தலைநகரப் போராட்டம் என்பது, தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கு ஒரு 'Wake-up call' (விழிப்புணர்வு மணி) எனத் தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் அரசு உடனடியாக விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கப்பட்டது

தொடர்புடைய தலைப்புகள்
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
முக்கிய செய்திகள்

திருச்சி அண்ணா ஸ்டேடியம் நடைபாதையில் 'ஃபுட் ஸ்ட்ரீட்'?: அதிகாரிகளின் அலட்சியமும் மக்களின் ஆதங்கமும்!

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சியும் உடற்ப…

2 நிமிட வாசிப்பு