முக்கிய செய்திகள்
2 நிமிட வாசிப்பு
திருச்சி அண்ணா ஸ்டேடியம் நடைபாதையில் 'ஃபுட் ஸ்ட்ரீட்'?: அதிகாரிகளின் அலட்சியமும் மக்களின் ஆதங்கமும்!
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் 'ஃபுட் ஸ்ட்ரீட்' திட்டத்திற்காக 40 கடைகள் அமைக்கும் இடமாக இந்த நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரச் சீர்…
முழுப் படம்
திருச்சி அண்ணா ஸ்டேடியம் என்பது திருச்சி மாநகர மக்களுக்கு வெறும் விளையாட்டு அரங்கம் மட்டுமல்ல; அது அவர்களின் ஆரோக்கியம் பேணும் மையமாகவும், காலை-மாலை வேளைகளில் அமைதியாக நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் செய்யும் வாழ்வியல் களமாகவும் திகழ்ந்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான், திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அண்ணா ஸ்டேடியத்தில் நடைபயிற்சிக்காகத் தனி நடைமேடை (Walking Track) அமைக்கப்பட்டது. முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நேரத்தைக் கழிக்க ஏற்ற ஒரு நல்ல சூழல் இங்கு நிலவி வந்தது. குறிப்பாக, சமீபகாலமாகப் பெண்களிடையே ஏற்பட்டுள்ள ஆரோக்கிய விழிப்புணர்வால், ஏராளமான பெண்கள் எவ்வித பயமும் கூச்சமுமின்றி இந்த இடத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி செய்து வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 'ஃபுட் ஸ்ட்ரீட்' (உணவுத் தெரு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், திருச்சி அண்ணா ஸ்டேடியத்தின் நடைபாதைப் பகுதியிலேயே 40 கடைகள் கொண்ட உணவுத் தெரு அமைக்கப்பட்டிருக்கிறது.
அரசு திட்டங்களைச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கதுதான்; ஆனால், மக்களின் நலனிலோ சமூக அக்கறையிலோ சிறிதும் கவனமில்லாமல் அதிகாரிகள் இந்த இடத்தை தேர்வு செய்திருப்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஏன் இந்த இடம் ஏற்றதல்ல?
* நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தனிமையையும், அமைதியான சூழலையும், பாதுகாப்பையுமே விரும்புவார்கள். 40 கடைகள் ஒரே இடத்தில் வரும்போது, அது ஒரு 'சந்தைக் கடை' போல மாறிவிடும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் சத்தம், நெரிசல் மற்றும் வாகன நடமாட்டம் நடைபயிற்சி செய்பவர்களின் அமைதியைப் பெரிதும் பாதிக்கும்.
* ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய இடத்தில் உணவுக் கழிவுகள் சேருவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்களின் தொல்லையும் அதிகரிக்கும். திறந்தவெளி உணவகங்களால் உண்டாகும் புகையும் கழிவுகளும், உடற்பயிற்சி செய்பவர்களுக்குச் தூய்மையான காற்று கிடைப்பதைத் தடுக்கும்.
* பயமின்றி சுதந்திரமாக நடைபயிற்சி செய்து வந்த பெண்களுக்கு, ஆயிரக்கணக்கான நபர்கள் கூடும் வணிக ரீதியான இடமாக இது மாறும்போது பாதுகாப்பின்மை உணர்வும், அசௌகரியமும் ஏற்படும்.
ஆரோக்கியமான சூழலை மக்களுக்கு உருவாக்கிக் கொடுப்பது தான் சுகாதாரத் துறையின் அடிப்படை கடமை.
ஆனால், திருச்சி பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு நடைபாதையை 'ஃபுட் ஸ்ட்ரீட்' திட்டத்திற்காக அதிகாரிகள் எப்படித் தேர்வு செய்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அதிகாரிகள் தரும் அறிக்கைகளை மட்டும் நம்பிச் செயல்படாமல், துறை சார்ந்த அமைச்சர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் நலன் சார்ந்த முடிவுகளில் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் கடந்த காலங்களில் ஆட்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவை நினைவில் கொண்டு, தற்போதைய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
திருச்சி நடைபயிற்சியாளர்களின் ஆரோக்கியத்தையும் அமைதியையும் கருத்தில் கொண்டு, இந்த 'ஃபுட் ஸ்ட்ரீட்' திட்டத்தை திருச்சி அண்ணா ஸ்டேடியம் நடைபாதையிலிருந்து மாற்றி, வேறு பொருத்தமான பொது இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
நன்றி,
விஸ்டம் நியூஸ்

புதுப்பிக்கப்பட்டது
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.
விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.