A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

புதிய அரசியல் பார்வை 2 நிமிட வாசிப்பு

அடக்குமுறைகளை உடைக்கும் ஒரு பெண்ணின் துணிச்சல் – Wisdom news

Wisdom news – In Media Anand குழப்பங்களும் திருப்புகளும் நிறைந்த அரசியல் சூழலில், இளைஞர்களின் பங்கு அதிகம் ஈடுபாடு என்றாலும், எத்தகைய மனநிலையில் பயணிக்க வேண்டும், எந்த கோட்பாட்டின் அடிப்படையில் பயணிக்க வேண்டும் என்ற ஒரு சுயசிந்தனை இல்லாத சூழல் நிலவி வரும் இன்றைய சூழலில்… குழப்பங…

Wisdom News
அடக்குமுறைகளை உடைக்கும் ஒரு பெண்ணின் துணிச்சல் – Wisdom news முழுப் படம்

Wisdom news – In Media Anand

குழப்பங்களும் திருப்புகளும் நிறைந்த அரசியல் சூழலில், இளைஞர்களின் பங்கு அதிகம் ஈடுபாடு என்றாலும், எத்தகைய மனநிலையில் பயணிக்க வேண்டும், எந்த கோட்பாட்டின் அடிப்படையில் பயணிக்க வேண்டும் என்ற ஒரு சுயசிந்தனை இல்லாத சூழல் நிலவி வரும் இன்றைய சூழலில்…

குழப்பங்களும் சவால்களும் நிறைந்த அரசியல் களத்தில், தங்களை இணைத்துக் கொள்வதோடு நின்றுவிடாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் மாணவர்களின் உரிமைக்காகவும் வீதிகளில் இறங்கிப் போராடும் இளம் தலைவர்களின் வரிசையில் நேகா போரா ஒரு அத்தியாவசியமான முகமாக ஒளிர்கிறார்.

உத்தரகண்டின் எளிய பின்னணியில் இருந்து வந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, அம்பேத்கர் பல்கலைக்கழகம் வழியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) தனது முனைவர் பட்ட கல்வியைத் தொடரும் நேகா போரா, கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக இருக்கக் கூடாது மாறது சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்வின் மூலம் நிரூபித்து வருகிறார்.

குறிப்பாக, தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் (NEET) தேர்வு முறைக் குளறுபடிகள் மற்றும் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளான போது, நேகா போரா முன்னெடுத்த போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. நீட் தேர்வு முறை கிராமப்புற மற்றும் எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறித்து, மிகப்பெரிய கல்விப் பிளவை உருவாக்குகிறது என்று அவர் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பினார். தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், உடல்நலக் குறைவையும் தாண்டி நீண்ட நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களிலும், மாணவர் திரள் போராட்டங்களிலும் அவர் உறுதியுடன் பங்கெடுத்தார்.

நீதிமன்றங்கள் மற்றும் அமைப்பு ரீதியான முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்ட வினாக்களும், மாணவர்களின் கோரிக்கைகளும் இறுதியில் மக்கள் மன்றத்தின் கவனத்தை ஈர்த்ததில் நேகாவின் பங்கு மிகப்பிரிது.

நீட் போராட்டங்களைத் தாண்டி, தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) நடவடிக்கையில் நடந்துள்ள குளறுபடிகள், முறைகேடுகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் (Chief Election Commissioner Gyanesh Kumar) உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், (SIR) திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் நேகா தன் இயக்கமான ‘ஐசா’ (AISA) அமைப்பின் மூலமாக வீதிகளில் நின்றும், காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி முறியடிக்கும் அவரது துணிச்சலும், அடக்குமுறைகளைச் சந்திக்கும் போழுதும் காட்டும் உறுதியும் இன்றைய இளைஞர்களின் முன் மாதிரியாக திகழ்கிறார் நேகா போரா.

இது வெறும் தனிப்பட்ட ஒரு நபரின் புகழைப் பற்றியது அல்ல; மாறாக, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இடதுசாரி மற்றும் மார்க்சிஸ்ட் சிந்தனைகள் எத்தகைய மக்கள் நலப் பார்வையோடு செயல்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு குறியீடாகும். எளிய மக்களின் குரலற்ற தன்மையை மாற்றுவதற்கும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதற்கும் நேகா போன்ற இடதுசாரி சிந்தனையாளர்களின் தொடர் முன்னெடுப்புகளும் போராட்டங்களும் சமூகத்திற்கு இன்றியமையாத தேவையாக இருக்கின்றன.

Wisdom News

புதுப்பிக்கப்பட்டது

தொடர்புடைய தலைப்புகள்
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
புதிய அரசியல் பார்வை

‘ரவுடியா? ஹீரோவா?’ – 80-களில் இளைஞர்களின் புரியாத புதிரும், ‘பத்தா’ திரைப்படமும்!

Anand I Wisdom News I 02.10.2026 1980-களின் கிராமத்துப் பின்னணியில், அன்றைய ரவுடியிசத்தின் போலிப் பிம்பத…

3 நிமிட வாசிப்பு
புதிய அரசியல் பார்வை

சுற்றுலா தளத்தில் காவிச் சாயம்: கொந்தளிக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமும் காவியும் திணிக்கப்படுகிறதா? அண்மையில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் த…

2 நிமிட வாசிப்பு