A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

ஒளி & நிழல் 4 நிமிட வாசிப்பு

அன்பில் அவன்: காதலின் ஆழமா? வன்முறையின் அழுத்தமா?

[ஒளி & நிழல்] – அன்பில் அவன்: காதலின் ஆழமா? வன்முறையின் அழுத்தமா?படம்: அன்பில் அவன்நடிப்பு: அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் மற்றும் புதிய நடிகர்கள்இயக்கம்: ஆர். கார்த்திகேயன்இசை: கோவிந்த் வசந்தாபார்வை : இன் மீடியா ஆனந்த் (Wisdom News) ​”சில படங்களைப் பார்த்ததும், ‘இதற்கு எதற்க…

Wisdom News
அன்பில் அவன்: காதலின் ஆழமா? வன்முறையின் அழுத்தமா? முழுப் படம்

[ஒளி & நிழல்] – அன்பில் அவன்: காதலின் ஆழமா? வன்முறையின் அழுத்தமா?
படம்: அன்பில் அவன்
நடிப்பு: அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் மற்றும் புதிய நடிகர்கள்
இயக்கம்: ஆர். கார்த்திகேயன்
இசை: கோவிந்த் வசந்தா
பார்வை : இன் மீடியா ஆனந்த் (Wisdom News)

​”சில படங்களைப் பார்த்ததும், ‘இதற்கு எதற்கு விமர்சனம்?’ என்று தோன்ற வைக்கும். இந்தப் படமும் ஆரம்பத்தில் அப்படித்தான் கடந்துபோக நினைத்தது. ஆனால், சினிமா மீதான நமது பார்வைக்கும், பொதுமக்கள் இப்படத்தை அணுகும் முறைக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பேச வேண்டியிருப்பது அவசியம். நான் உணர்ந்ததை, உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.” அன்பில் அவன்
ஒரு கணவன் – மனைவி. இருவரும் நகரின் ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் வெவ்வேறு பொறுப்புகளில் வேலை செய்கிறார்கள். ஆனால், அந்தப் பணிச்சுமை அவர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது. ஒருவருடன் ஒருவர் பேசக்கூட நேரமில்லாமல், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். அப்பொழுது, தன் காதலியாக இருந்து மனைவியாக வந்தவளைப் பற்றி ஹீரோ அசோக் செல்வன் நினைத்துப் பார்க்கிறார். தன் வசதியான வாழ்க்கையையும், பெற்றோரையும் துறந்துவிட்டு, தன்னை நம்பி மட்டுமே வந்த தன் மனைவியை உலகத்திலேயே மிக மகிழ்ச்சியாகவும் பொக்கிஷமாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அந்த மனிதனின் ஏக்கம்.
அந்த அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தான் அவர்களை இணைக்கும் பாலம்.

தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் அவர், தன் கையில் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டு, வங்கியிலும் கடன் வாங்கி, தேனிக்கு அருகில் உள்ள ஒரு மலைப்பிரதேச கிராமத்தில் ஒரு வீட்டை வாங்குகிறார். அங்கே சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்கான ஒரு ‘ஹோம் ஸ்டே’ (Homestay) தொடங்க வேண்டும் என்பதுதான் அந்தத் தம்பதியின் கனவு.
அந்த ஊரில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்திற்குச் சொந்தமான, ஆனால் கணவன் இறந்ததால் சென்னையில் வசிக்கும் அந்தத் குடும்பத்தின் ராணி போன்ற மூதாட்டியின் வீடு பூட்டிக் கிடக்கிறது. பலரும் கேட்டும் கொடுக்க மறுத்த அந்த வீட்டை, திறமையாக பேசி, அந்தத் தாயிடம் கேட்டு வாங்கிப் பதிவு செய்கிறார்கள். தங்கள் கனவு மாளிகையை ஹோம் ஸ்டேவாக மாற்றி அழகாக உருவாிறார்கள்.

ஆனால், இங்கிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அந்தப் புதிய வணிகத்திற்குத் தேவையான அரசு அதிகாரிகளின் அங்கீகாரம் (License) கிடைப்பதில் பெரும் தடையை எதிர்கொள்கிறார்கள். எங்கு நோக்கினாலும் லஞ்சம், மாமூல் என்ற சூழல் அவர்களைச் சுற்றிக் கொள்கிறது. இதற்கிடையில், அந்த வீட்டின் மீது கண்வைக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ., அசோக் செல்வத்திடமிருந்து அந்த வீட்டை அபகரிக்க நினைக்கிறார்.
​அங்குள்ள காவல் அதிகாரியும் எம்.எல்.ஏ-வும் இணைந்து திட்டம் தீட்டுகிறார்கள். எம்.எல்.ஏ தன் மகளின் திருமணத்திற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்து வரும் சமயத்தில், “வீட்டில் திருமணம் நடப்பதால் பெட்டிகள் அதிகம் உள்ளன, இடவசதி பற்றாக்குறை காரணமாகச் சில பெட்டிகளை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். வேறு வழியின்றி அசோக் செல்வமும் சம்மதிக்க, அங்கே அந்தப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன.
​உடனே அந்த காவல் அதிகாரி பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் (Forest Department) அதிகாரிகளுக்குக் புகார் அளிக்கிறார். அதிரடியாக வந்து அதிகாரிகள் பரிசோதிக்கிறார்கள். ஆனால் காடுகளில் இருந்து கடத்தப்பட்ட யானைத் தந்தங்களை எம்.எல்.ஏ அந்தப் பெட்டிக்குள் தான் வைத்திருக்கிறார் என்ற உண்மையை, ஏற்கனவே எம்.எல்.ஏ-விடம் வேலை செய்யும் ஒருவர் (தன் மகன் அவரிடமிருந்து வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்தில்) அசோக் செல்வத்திடம் முன்கூட்டியே சொல்லிவிட, ஹீரோ அந்த யானைத் தந்தங்களை வீட்டின் கீழ் ரகசியமாக மறைத்து வைத்துவிடுகிறார். இதனால் சோதனையில் எதுவும் கிடைக்காமல் அதிகாரிகளும் எம்.எல்.ஏ-வும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
​இதற்கிடையில், அந்த யானைத் தந்தத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் (Collector) சென்று உண்மையைப் போட்டுடைக்கிறார் அந்த வயதான தந்தை, “என் மகனையும் காப்பாற்றுங்கள்” என்று கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார். கலெக்டரும் எம்.எல்.ஏ-விடம் இந்தத் தகவலைச் சொல்கிறார். ஆத்திரமடைந்த அந்த எம்.எல்.ஏ, கலெக்டரிடம் சொன்னதால் அந்த வயதான முதியவரை மிகக் கொடூரமாகக் கொன்றுவிடுகிறார்!
அந்தப் படுகொலையைத் தற்செயலாக அங்கு வந்து பார்த்த அசோக் செல்வன், தன் செல்போனில் அதை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்கிறார். அவர் எடுத்த வீடியோ முடிந்தவுடன் போன் ‘ஆஃப்’ ஆகிவிடுகிறது. பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்கிறார். அதற்குள் அந்த இடத்திற்கு எம்.எல்.ஏ மற்றும் ஆட்கள் வருகிறார்கள்.
தன் மகளுக்குத் திருமணப் பத்திரிகை கொடுப்பதுபோல் தற்செயலாக அசோக் செல்வன் வீட்டுக்கு வந்ததாக எம்.எல்.ஏ கூற, அசோக் செல்வனின் செல்போனை வாங்கிப் பார்க்கும் எம்.எல்.ஏ, அதில் வீடியோ இருப்பதைத் தெரிந்துகொள்கிறான்.

அங்கிருந்து படம் முழுமையான வன்முறைக் களமாக மாறுகிறது. நீண்ட சண்டைக் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் கத்திக் குத்துகள் என்று படம் முழுவதும் ஒரு பதற்றமான மன இறுக்கம் தொற்றிக்கொள்கிறது. எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆட்களுக்கும், அசோக் செல்வனுக்கும் இடையே நடக்கும் கடுமையான மோதலில் இருவரும் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். விடிந்து பார்க்கும்போது தன் மனைவி இறந்துவிட்டதாகவே ஹீரோ நினைக்கிறார்; ஆனால், பல குத்துகளுக்குப் பிறகும் ஒரு சிறிய மூச்சுடன் மனைவி உயிர்பெற்றுப் பிழைக்கிறாள். சில ஆண்டுகளுக்குப் பின்பு, பல வலிகளைத் தாண்டி அவர்கள் தங்கள் ஹோம் ஸ்டேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இத்துடன் படம் நிறைவடைகிறது.
​கணவன் – மனைவி இடையேயான தூய அன்பு, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அக்கறை, தன் காதல் மனைவிக்காக எதையும் செய்யும் ஒரு சராசரி மனிதனின் ஆதங்கத்தை மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
புதிய கிராமப்புறத்தில் தொழில் தொடங்கும் எளிய மனிதர்கள் சந்திக்கும் அரசு மற்றும் அரசியல் பிரமுகர்களின் லஞ்சம், மாமூல் மற்றும் அதிகார அத்துமீறல்கள் இந்த நவீன காலத்தின் நிதர்சனமான உண்மைகள்.
கோவிந்த் வசந்தாவின் இசையும், அசோக் செல்வன் மற்றும் அறிமுகக் கலைஞர்களின் நடிப்பும் கதையைத் தாங்கிப் பிடிக்கின்றன.
தூய காதலையும், தம்பதியரின் தியாகத்தையும் மையமாகக் கொண்டு ஒரு அழகான காவியமாக வந்திருக்க வேண்டிய படம், முழு நேர அடிதடி, கத்திக் குத்து மற்றும் ரத்தக் களறியான சோகமான த்ரில்லராக மாறியுள்ளது.
படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மன அழுத்தத்தையே (Mental Stress) தருகிறது. உடல் மற்றும் மன பலவீனமானவர்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நல்லது. அன்பு மற்றும் காதல் என்பது படத்தின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே சுருங்கிவிட்டது பெரிய ஏமாற்றமே.
​– இன் மீடியா ஆனந்த், Wisdom News.

புதுப்பிக்கப்பட்டது

தொடர்புடைய தலைப்புகள்
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்