புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு; அமைச்சர் ராஜவேலு வெளியிட்டார்.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், எழுத்தாளர் ராமஜெயம் எழுதிய ‘ஆண்பாவம்’, ‘முக்கோண காதல்’, மற்றும் ‘பொய்’ ஆகிய மூன்று நூல்களை கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் ராஜவேலு வெளியிட, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் முத்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் நூலாசிரியர் ராமஜெயம், பொன். கோவிந்தசாமி, விவேகானந்தன், கருணாமூர்த்தி, மற்றும் பாவாடை சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.




