A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

மக்களை அதிகாரப்படுத்தும் உள்ளாட்சித் தேர்தல்

27.09. 2026 I ஜெயச்சந்திரன் முதன்மை செய்தியாளர் I Wisdom News கிராம ஊராட்சி நிர்வாகத்தை அறிந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் முறைப்படி போட்டியிடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில், ஒரு நாள் சிறப்புப் பயிற்சிப் பட்டறை திருச்சி பிராட்டியூரில் உள்ள பொதுநி…

மக்களை அதிகாரப்படுத்தும் உள்ளாட்சித் தேர்தல்View full image

27.09. 2026 I ஜெயச்சந்திரன் முதன்மை செய்தியாளர் I Wisdom News

கிராம ஊராட்சி நிர்வாகத்தை அறிந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் முறைப்படி போட்டியிடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில், ஒரு நாள் சிறப்புப் பயிற்சிப் பட்டறை திருச்சி பிராட்டியூரில் உள்ள பொதுநிலையினர் பணிக்குழு மையத்தில் 27.09.2026 அன்று நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையை ‘தன்னாட்சி’ என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

தன்னாட்சி அமைப்பைச் சேர்ந்த திரு. நந்தகுமார் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பயிற்சிப் பட்டறையை நடத்தினர். இதில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள், அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு, வேட்புமனு (Nomination) மற்றும் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) பூர்த்தி செய்யும் முறை, இட ஒதுக்கீட்டு முறைகள், சின்னங்கள் ஒதுக்கீடு, ஊராட்சி நிர்வாகக் கட்டமைப்பு, முன்மாதிரி ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருடன் நேரடி கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் ஊராட்சி நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் நடைமுறைச் சவால்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்புகள் மற்றும் மக்கள் பங்கேற்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Updated

Explore these topics
Thanks for reading.

There’s always another perspective to discover.