A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

நிஜங்கள் 1 நிமிட வாசிப்பு

“நான் முதல்வர் ஆனால்…”

“நான் முதல்வர் ஆனால்…” – தமிழகம் மற்றும் புதுச்சேரி தழுவிய பிரம்மாண்ட பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது!புதிய கனவுகள், புதிய திட்டங்கள், புதிய தமிழகம் என்ற உன்னத நோக்கில், இன் மீடியா (In Media), OY TV மற்றும் அமேஸ் ஐஏஎஸ…

Wisdom News
“நான் முதல்வர் ஆனால்…” முழுப் படம்

“நான் முதல்வர் ஆனால்…” – தமிழகம் மற்றும் புதுச்சேரி தழுவிய பிரம்மாண்ட பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது!
புதிய கனவுகள், புதிய திட்டங்கள், புதிய தமிழகம் என்ற உன்னத நோக்கில், இன் மீடியா (In Media), OY TV மற்றும் அமேஸ் ஐஏஎஸ் அகாடமி (Amace IAS Academy) ஆகியவை இணைந்து நடத்திய “நான் முதல்வர் ஆனால்…”

மாநில அளவிலான பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 14 அன்று திருச்சி தூய வளனார் கல்லூரி (St. Joseph’s College) வளாகத்தில் உள்ள ஜிம் (JIM) அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


​தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள் மற்றும் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய வகையில் இரு பிரிவுகளாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைகளையும், கனவுத் திட்டங்களையும் பேச்சாளர்கள் வெளிப்படுத்தும் ஒரு தளமாக இது அமைந்தது.


இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை டோமி, விக்டர் (NEST School Lalgudi) மற்றும் திரைப்பட இயக்குனர் புருனோ ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்கள் பேசுகையில், “இளம் பேச்சாளர்களின் இந்தத் திட்டங்கள் ஒரு நல்ல தேர்தலுக்கான வலுவான அடித்தளமாகவும், சமூக மாற்றத்திற்கான விதையாகவும் அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


​மாநிலம் முழுவதிலும் இருந்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வான திறமையான பேச்சாளர்கள் மேடையில் மோதினர். இப்போட்டியின் நடுவர்களாக ராஜாத்தி மற்றும் சீனிவாசன் ஆகியோர் செயல்பட்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற அனைத்துப் பேச்சாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
புதிய அரசியல் பார்வை

*Dorathy திரைப்படம்: திருச்சி சிவா அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது!"*

மறுக்கப்பட்ட சமத்துவம், மறுக்கப்பட்ட எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்த திருநங்கைகளின் வாழ்க்கை ஒரு சிறிய ப…

2 நிமிட வாசிப்பு