A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

பிஷப் ஹீபர் கல்லூரியில் ‘ஈகோஸ்பியர்’ நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் (தன்னாட்சி), வணிகவியல் துறை (ஷிப்ட் II), ECO CLUB சார்பில் ‘ECOSPHERE’ என்ற சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. R. ஆண்டனி லூயிஸ், M.Sc., M.Phil.,B.Ed., மாவட்ட அமைப்பு ஆணை…

Editorial story imageView full image

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் (தன்னாட்சி), வணிகவியல் துறை (ஷிப்ட் II), ECO CLUB சார்பில் ‘ECOSPHERE’ என்ற சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. R. ஆண்டனி லூயிஸ், M.Sc., M.Phil.,B.Ed., மாவட்ட அமைப்பு ஆணையர், பாரத சாரணர் இயக்கம், திருச்சி கல்வி மாவட்டம் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் நடுதலின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை தலைவர் முனைவர் D. பென்னலா ஆக்னஸ் அய்லின் அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், முனைவர் K. முத்துலட்சுமி மற்றும் முனைவர் H. கவிதா ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்பட்டனர். ECO CLUB இயக்குனர் பேராசிரியர் R. நந்தகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் முனைவர் P. கனகராஜு, முனைவர் E. சுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 110-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் S. சுபாஷினி, B. முகமது இப்ராம்ஷா, M. முத்துகுமரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Updated

Explore these topics
Thanks for reading.

There’s always another perspective to discover.