A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

வாயை மூடு

நீங்கள் படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாமல் இருந்த நாட்கள் உண்டா? நீங்கள் தூக்க கலக்கத்தோடு இருந்ததால் அல்ல, ஆனால் நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது, அல்லது பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து, போனதினால் அல்ல, ஆனால் படுக்கையில் கிடப்பதே மேல் என்பதினால் ஆமாம்,…

வாயை மூடுView full image
A beautiful woman wearing a traditional saree stands in a misty forest. The atmosphere is serene, highlighting the elegance and cultural richness of the scene. The light, with the trees, create a unique composition.

நீங்கள் படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாமல் இருந்த நாட்கள் உண்டா? நீங்கள் தூக்க கலக்கத்தோடு இருந்ததால் அல்ல, ஆனால் நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது, அல்லது பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து, போனதினால் அல்ல, ஆனால் படுக்கையில் கிடப்பதே மேல் என்பதினால் ஆமாம், அநேகமாக நாம் அனைவருமே அத்தகைய நாட்களை கடந்து வந்திருப்போம். ஆனால் அத்தகைய நாட்களை வெற்றி கொள்வதற்கு உங்கள் அக உரையாடலை, உங்கள் அக தகவல் பரிமாற்றத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அது தொடர்பால், நீங்கள் படுக்கையை விட்டு எழும்புவதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை என்று உங்களிடம் சொல்லும் போது, நீங்கள் உடனே “வாயை மூடு” என்று மறுமொழி அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்! அதுதான் சரி. வாயை மூடு என்று சொல்லிலிட்டு, அதன் பிறகு, எழுந்திரு, எழுந்திரு, முன்னேறிக் கொண்டு இரு,பரபரப்பாக இயங்கு என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளவும்! ஏனென்றால், அதை
மட்டுமே ஆகும்

உங்களுக்காக வேறு எவரும் செய்யப் போவதில்லை, ஆனால் நீங்கள் மட்டுமே அதை செய்தாக வேண்டும். மனச்சோர்வு என்பது வழக்கமாக, எதிர்மறையான சிந்தனை கொண்ட அக உரையாடலின் விளைவே ஆகும். படுக்கையை விட்டு எழுந்து நேர்மறையான ஏதாவது ஒன்றை (எமோஷனல் மினிட் போல) கேட்கவும் அல்லது நேர்மறையான ஏதாவது எழுத்தாக்கத்தை வாசிக்கவும், தினசரி அடிப்படையில், உங்களால் வரிசை மாறாமல் அப்படியே சொல்லக் கூடிய உறுதிமொழிகளின் பட்டியல் ஒன்றை தயாரிக்கவும்.
“இன்று ஒரு மகத்தான நாளாக அமையப் போகிறது, ஏனென்றால் இன்று அப்படித்தான் இருக்கும் என்று நான் முடிவு எடுத்துவிட்டேன். ஒரேபோல் இரண்டு இலைகள் கிடையாது, ஒன்று போலவே இருக்கும் இரண்டு உதிர்பனித்துளிகள் கிடையாது, ஒன்று போலவே இருக்கும் இரண்டு கைரேகைப் பதிவுகள் கிடையாது. நான் எதைச் செய்வதற்குப் பிறந்து இருக்கிறேனோ, அதைச் செய்வதற்கு வேறு யாரும் பிறக்கவில்லை.” விழித்து எழு, எழுந்திரு, அப்போதுதான் நீ மேலே உயர முடியும் | ஒரு மகத்தான இனிய நாளை பெற்றிருக்க முடிவெடுக்கவும்.

Updated

Thanks for reading.

There’s always another perspective to discover.