A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

டீக்கடை பெஞ்ச் - Wisdom News 2 நிமிட வாசிப்பு

இப்படி ஒரு மெசேஜா? இது தேவையா ராஜகுமாரா?”

Kallakurichi MLA Message Issue Government that will not break its silence

Anand
இப்படி ஒரு மெசேஜா? இது தேவையா ராஜகுமாரா?” முழுப் படம்
இப்படி ஒரு மெசேஜா? இது தேவையா ராஜகுமாரா?”
டீக்கடை பென்ச் - விஸ்டம் செய்திகள்
டீக்கடை பென்ச் - விஸ்டம் செய்திகள Episode - 1



டீக்கடை பெஞ்ச் – எபிசோடு 1 

சாம்பிராணி: ஏம்பா தண்டோரா... கள்ளக்குறிச்சியில ஒரு மெசேஜ் தமிழ்நாட்டு அரசியலையே கலக்குதாமே? 

தண்டோரா: ஆமாண்டா! எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட கலெக்டருக்கு இரவு நேரத்துல, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்'ன்னு மெசேஜ் அனுப்பியதாகப் புகார் வந்திருக்காம்!

சாம்பிராணி: அடடே! ஒரு மெசேஜ் இவ்வளவு பெரிய அரசியல் விவாதமாகிடுச்சா?

தண்டோரா: அதுமட்டுமா? திமுக கடும் கண்டனம் தெரிவிக்குது. போராட்டமும் நடத்துது. ஊடகங்கள் விவாதம் நடத்துது. யூடியூப்ல தனி விசாரணையே நடந்துகிட்டிருக்கு!

மல்லிகா: (குறுக்கிட்டு) அட, இவ்வளவு பேரும் பேசு
றாங்களே... அப்போ அரசாங்கம் என்ன சொல்லுது?

தண்டோரா: அமைச்சர் நிர்மல் குமார் ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுறாராம். புகார் கொடுத்தா நடவடிக்கை எடுப்போம்னு அரசு தரப்பு சொல்லுதாம்!

மல்லிகா: என்னப்பா இது? ஊருக்கே தெரிஞ்ச ஒரு விஷயத்துக்கு புகார் வந்தாதான் நடவடிக்கையா? முதலமைச்சர் இதுவரைக்கும் ஒரு வார்த்தைகூட சொல்லலையே!

சாம்பிராணி: கலெக்டர் தரப்பிலிருந்தும் இதுவரைக்கும் மறுப்பு வரலையே!

மல்லிகா: அதுக்காக அவங்ககிட்ட ஏன் கேள்வி கேட்கணும்? அவங்க என்ன தப்பு செஞ்சாங்க? அரசாங்கம்தானே இதற்குப் பதில் சொல்லணும்? 

தண்டோரா: நீ சொல்றதும் சரிதான். ஆனா முதலமைச்சர் ஏன் அமைதியா இருக்காருன்னுதான் புரியல!

மல்லிகா: அதான் எனக்கும் சந்தேகம்! எதிர்க்கட்சிகள் பேசுது, ஊடகங்கள் கேள்வி கேட்குது, போராட்டம் நடக்குது. ஆனா அரசாங்கம் மட்டும் இன்னும் மெசேஜ் படிக்காத மாதிரி இருக்கே!

சாம்பிராணி: விஜய் என்ன சொல்லியிருக்காரு?

தண்டோரா: யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லியிருக்காரு.

மல்லிகா: அதுதான் சரி! ஆனா அதைச் செயலிலும் காட்டணும். 
அரசியல்ல அண்ணன், தம்பி, மாமான்னு உறவு வேணாம். தப்பு செஞ்சா நடவடிக்கைதான் முக்கியம்!

தண்டோரா: அடடே! மல்லிகா அரசியல் பாடமே நடத்திட்டாங்களே!

சாம்பிராணி: சரி, இவ்வளவு நேரம் அரசாங்கத்திடம் பதில் கேட்டோம். இப்போ டீக்கடைக்காரர் நம்மகிட்ட பில் கேட்கிறாரு. யாரு பதில் சொல்லப்போறது?

மல்லிகா: அரசியல்லதான் எல்லாரும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கி
றாங்கன்னு பார்த்தா, இங்கேயுமா?

தண்டோரா: அதுதான் ஜனநாயகம்... 

Wisdom News

புதுப்பிக்கப்பட்டது

தொடர்புடைய தலைப்புகள்
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.