முன்னேற்றும் கதைகள்

உங்களை இயக்குவது யார்?

ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர் பள்ளியில் பேசி முடித்த பிறகு, தன்னுடைய உரையால் ஈர்க்கப்பட்ட ஒரு இளம் பெண் அவரை நோக்கி வந்தார். உங்களுடைய பேச்சுரையும் அதில் இருந்த தகவல்களும் பயனுள்ளவையாக இருந்ததாக வெகுவாகப் பாராட்டினார். ஆனால் அக்கருத்துக்கள் யாவும் ஏற்கனவே வாழ்க்கையில் நடந்தேறி இருக்கிறதா என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். “நீங்கள் கூறியவை எல்லாம் உண்மையிலேயே பலன் அளிக்குமா?” அதன்பிறகு அவர் அவரிடம் மற்றொரு வினாவை எழுப்பினார் நீங்கள் என்ன மாதிரியான காரை ஓட்டுகிறீர்கள்?” அவருடைய வினா அவரை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், ஒருவர் ஒட்டும் காருக்கும் அவருடைய வெற்றியின் அளவுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் அவருடைய கண்களைப் பார்த்து சொன்னார் “உண்மையிலேயே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நான் இப்போது என்ன காரை ஓட்டுகிறேன் என்பது உண்மையாகவே ஒரு பொருட்டல்ல. என்னை இயக்குவது எது என்பதே முக்கியமாகும்! என்னுடைய நோக்கத்தை அடைவதற்கு ஏற்ப நான் இயக்கப்படுகிறேன் எனில், தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஒரு வாழ்க்கையை
அடைவதற்கு ஏற்ப நான் இயக்கப்படுகிறேன் எனில், அப்போது நான் என்ன மாதிரியான காரை விரும்பினாலும் அதை என்னால் விலைக்கு வாங்கி ஓட்ட முடியும்!” வாழ்க்கையில் நீங்கள் என்ன கார் ஓட்டுகிறீர்கள் என்பது ஒருபொருட்டல்ல, உங்களை எது இயக்குகிறது என்பதே கணக்கில் கொள்ளப்படும்! நீங்கள்… தனிச்சிறப்புத்தன்மையுடன் விஞ்சி நிற்பதை தேடிச் செல்லவும். இருப்பவற்றிலேயே மிகச் சிறந்ததை இயக்கவும்… அது நீங்களே!
ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் உங்களை இயக்குவது யார் என்று அடிக்கடி உங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்களுடைய சொந்த சித்தாந்தத்தில் சிந்தனையில் பயணிங்கள் அப்பொழுதுதான் நீங்கள் யார் என்று தனித்துவமாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »