செய்திகள்

விஜய் கல்வி விருது விழா

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கல்வி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
நடிகர் விஜய் பேசிய முக்கிய அம்சங்கள் இங்கே:

  • மன உளைச்சல் வேண்டாம்: “படிப்பு சாதனைதான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஒரே ஒரு படிப்பில் மட்டும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசிக்காதீங்க. அவ்வளவு மன அழுத்தம் ஆக வேண்டிய அவசியமில்லை. மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பறவைபோல் சிறகு விரித்துப் பறந்து செல்லுங்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
  • நீட் தேர்வு குறித்த பார்வை: “நீட் மட்டுமே உலகமா? நீட்டைத் தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது; அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று நீட் தேர்வு குறித்த மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பேசினார்.
  • ஜனநாயகம் மற்றும் ஊழல்: ஜனநாயகம் மிக முக்கியம் என்றும், ஜனநாயகம் இருந்தால் தான் எல்லாருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். ஊழலற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், ஜனநாயகக் கடமையை அனைவரும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
  • சாதி, மதம் குறித்த அறிவுரை: சாதி, மத பிரிவினை சிந்தனைக்கு உள்ளாகாதீர்கள் என்றும், போதைப் பொருட்கள் போல சாதியை தூரமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
  • AI போன்ற தொழில்நுட்பங்கள்: டெக்னிக்கல் மற்றும் அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள். ஏற்கனவே வந்துவிட்ட AI போன்ற தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு அதுதான் ஒரே வழி என்று புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.
  • பெரியார் குறித்து: அரசுப் பணித் தேர்வில், சர்ச்சைக்குரிய கேள்வி மூலம் பெரியாருக்கே சாதி சாயம் பூசும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருவதாக விமர்சித்தார்.
  • நம்பிக்கை மற்றும் ஊக்கம்: “எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா” என்கிற பாசிடிவ் அப்ரோச் ஓடவே செல்லுங்கள் என்று மாணவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தார்.
    இந்த விழாவில், மதுவால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தாய் விஜய்யிடம் கண்கலங்கி, மது ஒழிப்பு குறித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »