முக்கிய செய்திகள்

சகாயம் ஐஏஎஸ் காணொளி வழியாகவும் ஆஜராகவில்லை!

கல்குவாரி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு சகாயம் ஐஏஎஸ் காணொளி மூலம் ஆஜராகவில்லை.
சகாயம் ஐஏஎஸ் அவர்கள்
நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு முக்கிய காரணம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்ததுதான்.
இது தொடர்பாக சகாயம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு அவருக்கு வழங்கி வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என்றும் குறிப்பிட்டிருந்தார். கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் தனது பாதுகாப்பு விலக்கப்பட்டது தவறு என்றும், மிகவும் ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், அவர் சட்ட ஆணையராக இருந்தபோது, தன்னை “வெட்டி கனிம சுரங்கத்தில் வீசிவிடுவோம்” என மிரட்டல் கடிதங்கள் வந்ததாகவும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து, மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை, ஏன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, மீண்டும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? அவ்வாறு இல்லாதபட்சத்தில் மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தற்போது, மதுரை உயர்நீதிமன்றம் சகாயத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவர் எந்தவித பயமும் இன்றி வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் காணொளி மூலம் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடதக்கது













Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »