முன்னேற்றும் கதைகள்

முன்னேற்றப் பயணம்

முன்னேற்றப் பயணம் தோல்வியில் ஆரம்பம்
ஒவ்வொரு வெற்றியாளரும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியை சந்தித்து இருப்பார். ஆனால் அவர்கள் தோல்வியை பயன்படுத்திக் கொள்கின்றனர், தோல்வியில் இருந்து கற்றுக் கொள்கின்றனர். தோல்வியை தங்கள் ஆசானாக்கிக் கொள்கின்றனர், தங்களை வெட்டியானாக அவர்கள் நினைப்பது இல்லை. தாமஸ் எடிசன் பல்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் 10,000 முறைகளுக்கும் மேல் தோல்வி அடைந்தார். ஆனாலும்
அவர் மனம் உடைந்து தன் முயற்சிகளை கைவிட்டு விடவில்கை. என் உங்கள் முயற்சிகளை நீங்கள் கைவிடவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறினார், “நான் தோல்வி அடையவில்லை. மின்சார பல்பைக் கண்டுபிடிக்காமல் இருக்க மற்றுமொரு வழிமுறையைத் தெரிந்து கொண்டேன்” என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறுகிறார். “நமது சந்தேகங்கள் என்பன துரோகிகள் ஆகும், அவற்றினால் நாம் முயற்சி செய்வதற்கே அச்சப்பட்டு வெல்லக்கூடிய நல்லவற்றை கூட இழக்க வைத்துவிடும்.” தோற்பதற்கு பயப்படக் கூடாது. உண்மையில் சொல்லப்போனால், தோல்வி அடைவதை எதிர்நோக்கி இருக்கவும், ஏனென்றால் நீங்கள் தோல்வி அடைந்து அந்த தோல்வியில் இருந்து கற்றுக் கொள்கிறீர்கள் எனில், உங்கள் குறிக்கோளை நீங்கள் நெருங்குகிறீர்கள் என்று அர்த்தம் ஆகும். பல தோல்விகளைச் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அவர் தனது 21வது வயதில் தொழிலில் நஷ்டம் அடைந்தார்; தனது 22வது வயதில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்; தனது 24வது வயதில் மறுபடியும் ஒரு தொழிலில் நஷ்டம் அடைந்தார்; தனது 26வது வயதில் தனது ஆருயிர் மனைவியை இழந்தார். தனது 27வது வயதில் ஒருவித மனக்கோளாறால் பாதிக்கப்பட்டார். தனது 34வது வயதில் யுனைட்டட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்தார்; மீண்டும் தனது 36வது வயதில் அதே தேர்தலில் தோல்வி கண்டார்; தனது 45வது வயதில் செனட் தேர்தலில் மற்றொரு முறை தோல்வியை தழுவினார்; தனது 47வது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தார்; தனது 49வது வயதில் செனட் தேர்தலில் மறுபடியும் தோல்வி கண்டார்; தனது 52வது வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்! அவருடைய பெயர் ஆபிரகாம் லிங்கன்! மக்களே, நீங்கள் ஒருபோதும் மனம் தளர்ந்து உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள்! தோல்வி உங்களை கீழே தள்ள ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அது வெற்றியின் ஒரு பகுதி ஆகும். உங்களுடைய தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும். தோல்வியை உங்கள் ஆசானாக மாற்றிக் கொள்ளவும், உங்கள் வெட்டியானாக அல்ல!

மக்கள் தோற்கடிக்கப்படும் போது அதோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அவர்கள் கைவிட்டு வெளியேறினால் மட்டுமே அவர்களுடைய முன்னேற்றப் பயணம் முடிவுக்கு வருகிறது!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »