பரலோகத்தின் பெயரில் – அடிமைத்தனத்தின் பொற்கட்டில்
“மறுமை வாழ்க்கை இருக்கிறது; அதில் நாம் நல்லோர் என்றால் சொர்க்கம், கெட்டோர் என்றால் நரகம்.”இந்த வாசகம் நம்மில் பலருக்கும் குழந்தை பருவத்திலிருந்தே காதில் விழுந்திருக்கும்.ஆனால் இந்தக் கருத்தின் பின்னால் பதுங்கியிருக்கும் மனித சுதந்திரத்தின் அடிமைத்தனத்தை யார் கண்டு பிடிக்கிறார்கள்?யார் கேள்விப்படுகிறார்கள்? இந்த சூழ்ச்சியை கேள்வி கேட்காமல் ஏற்கச் செய்வதற்காகதான் ‘மறுமை வாழ்க்கை’ என்ற மாயை உருவாக்கப்பட்டது. இது ஒரு போலி தீர்வு.உண்மையை ஒளிக்கிறது. நியாயத்தைக் கடக்கும் வஞ்சகர்களுக்கு பாதுகாப்பு தருகிறது.துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை விதைக்கிறது. […]