நிஜங்கள்

ஸ்டான் சுவாமி – சிலையின் உள்ளே மறைந்த சதி நாடகம்

மக்கள் நலனுக்காக வாழ்ந்த ஒரு ஆழமான உள்ளத்துடன் செயல்பட்ட மனிதர் ஸ்டான் சுவாமியின் நினைவு தினம் ஜூலை 5… அவரது வாழ்வும், சமூக நீதி பற்றிய உறுதியும், பழங்குடி மக்களின் உரிமைக்காகத் தூண்டிய அவரின் போராட்டங்களும் இந்திய சமூக சிந்தனையில் இன்னும் புதையல் போல் உள்ளது. ஆனால் இன்று, அவரின் பெயர் சிலை Politics-ல் சிக்கி, பல கேள்விகளை எழுப்பும் நிலையில் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை. ஸ்டான் சுவாமி – ஒரு இயேசு சபைக் குரு, […]

பிரபஞ்ச ரகசியம்

மரங்களோடு உரையாடிய மனிதன் – ஒரு மறக்கப்பட்ட அதிர்வியல் மாயை

நாம் வாழும் இந்நவீன உலகில், மனிதன் தொலைதூர தகவல் பரிமாற்றம் செய்யும் திறனை தொழில்நுட்ப சாதனங்கள் வழியாக அடைந்துள்ளான். ஆனால், தொலைபேசி, இணையம் போன்றவை தோன்றுவதற்கு முன்பே, ஒரு இயற்கையான “டிரான்ஸ்பர் மெஷின்” மனிதனுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அது மரம். மரங்களை வைத்து தொலைதூர தகவல் பகிர்வது என்பது பண்டைய மலைவாழ் மக்கள் கொண்டிருந்த இரகசிய அறிவின் ஓர் அற்புதம். இது வெறும் கற்பனை அல்ல. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களும் இதை அறிவியல் சாத்தியமாகவே உறுதிப்படுத்தியுள்ளனர். Michael Pollan, […]

செய்திகள்

உலக யோகா தினம்: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விழாக் கொண்டாடல்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 2015 முதல் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு 11வது யோகா தினமாகும். “ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்” (Yoga for One Earth, One Health) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் யோகா தின விழா நடைபெற்றது. மாகே மைதானத்தில் நடைபெற்ற இவ்விழா, முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் தலைமையில் நடைபெற்றது. இணைமுதல்வர் […]

முன்னேற்ற பயணம்

மாறுபட்ட ஒளிநிழல்கள் பெண்?

ஒரு பெண் தன்னை அழகுபடுத்துவதற்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் சமூக ஒளிநிழல்கள் என்ன? பெண்கள் ஏன் தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்?ஏன் மற்றவர்களை ஈர்க்க வேண்டும்? இதுவென்று நாம் ஒதுக்கி வைக்கும் சாதாரணக் கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்புலம், ஒரு பெரிய மாயக் கட்டமைப்பாகப் பரவியுள்ளது. இது ஒரு பெண்ணின் மதிப்பை குறைப்பதற்காக அல்ல. மாறாக, அவள்மீது சுமத்தப்பட்ட மானுட சாயலான மோசடியிலிருந்து விழிப்பூட்டவே இக்கட்டுரை. இன்றைய பெண்ணின் அன்றாட வாழ்க்கையில், தனது முகம், உடல், […]

செய்திகள்

திருச்சியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், 2025 ஜூன் 19 வியாழக்கிழமை அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அருட்பணி ஜோ அருண் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அமைச்சர் கே.என். நேரு, தலைவர் அருட்பணி ஜோ அருண் அவர்களை வரவேற்று நிகழ்வைத் தொடக்கி வைத்தார். […]

முன்னேற்ற பயணம்

காற்றின் மொழி

சென்னை நகரின் மையப்பகுதியில், ஒரு பரபரப்பான சலசலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது ‘வேர்விடும் கனவுகள்’ என்ற பெயர்ப்பலகை கொண்ட சிறிய புத்தகக் கடை. அதன் உரிமையாளர், ஆதித்யா. புத்தகங்களை நேசிப்பவன், இலக்கியத்தில் மூழ்கிக் கிடப்பவன். அவனுக்குப் பெரிய கனவுகள் உண்டு: ஒருநாள் உலகின் சிறந்த நூலகங்களைப்போல் ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு வாசகனையும் அவன் தேடும் புத்தகத்தோடு இணைக்க வேண்டும். ஆனால், அவனுடைய நிதர்சனமோ, சிறிய கடையும், வாடகைக்குப் போராடும் நிலையும்தான்.ஒருநாள் மாலை, வழக்கம்போல கடையில் புத்தகங்களை […]

மனித ஆற்றல்

ஆரியத்துக்கும் யூதத்துக்கும் நடுவே சிக்கிய மனிதம்

ஈரான் என்றாலே இன்று ஷியா இஸ்லாமியர்கள் என்பதே உலகக் கருத்து. ஆனால் அதற்கு முன்னர், அவர்கள் ஒரு நேரத்தில் பாரசீகர்கள் (Persians) என்றழைக்கப்பட்ட, சிறந்த நாகரீகத்தையும், அறிவியலையும் கொண்ட, சோராஸ்டிரிய மதத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். இந்த பாரசீகர்கள், இந்திய பார்ப்பனர்களுடன் தொடர்புடைய ஆரிய இனக்குடும்பத்திலிருந்து வந்தவர்களாகும். கிமு 2000–1500 காலப்பகுதியில், மத்திய ஆசியாவின் ஸ்தேப் பகுதியில் இருந்த இந்தோ-ஐரோப்பிய இனக் குழுக்கள் புலம்பெயர்ந்து, ஒரு கிளை மேற்கே சென்றது — பாரசீகமாக உருவானது (இன்றைய ஈரான்), மற்றொரு […]

மனித தந்திரம்

காதலில் யார் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்

(ஆண்களா? பெண்களா? உணர்ச்சி, உளவியல், புள்ளிவிவரச் சிறப்பாய்வு) “அவன் அழவில்லை… ஆனால் கண்களும் இதயமும் மெளனமாய்த் தத்தளித்தன.அவள் அழக்கூடிய அளவுக்கு அழுதாள். ஆனால் பிறகு மறுபிறவி போல எழுந்தாள்…” இது காதல் என்ற பயணத்தின் இரண்டு பாதைகள்.அதில் யார் உண்மையில் ஏமாற்றப்படுகிறார்கள்? யாருக்கு உணர்வுப்பூர்வமான பிளவு அதிகம் ஏற்படுகிறது?ஆண்களா? பெண்களா?இந்தக் கேள்விக்கான பதில் காதல் – ஒரு மனதின் முதலீடு காதல் என்பது வெறும் “உடனடி” உணர்வல்ல.அது ஒருவரைப் பற்றிய எதிர்பார்ப்புகளின் மெதுவான கட்டமைப்பாக வளர்கிறது.ஒருவரை நம்புவது, […]

முக்கிய செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது – நீதிமன்ற உத்தரவில் சட்டத்தின் மேலாட்சி மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வயதான சிறுவன் ஒருவர், தனது விருப்பப்படி காதலித்து திருமணம் செய்த பெண்ணுடன் வாழும் சூழலில் இருந்தார். ஆனால், இந்த காதல் திருமணத்திற்கு குடும்பம் மற்றும் சமூகக் கும்பல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ மற்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, மற்றும் அவரது உறவினர்களின் தலையீட்டில், சிறுவன் மீனம்பாக்கம் பகுதியில் இருந்து அரசு வாகனங்கள் மற்றும் கூலி படையினர் உதவியுடன் கட்டாயமாக கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தச் […]

செய்திகள்

கிரிப்டோ கரன்சி வழக்கு – நடிகைகள் கைதாகிறார்களா?

ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு – முழுமையான விவரம்வழக்கின் பின்னணி: 2021-ல் “ஆஷ்பே” (Hashpe/Drone Connect) என்ற பெயரில் கிரிப்டோ கரன்சி முதலீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், பொதுமக்கள் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்தனர். நாடு முழுவதும், குறிப்பாக புதுச்சேரி, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில், ஏறத்தாழ 8,000 பேர் ரூ.100 கோடி வரை இழந்துள்ளனர். முக்கிய குற்றவாளிகள் மற்றும் கைது […]

Translate »