முன்னேற்ற பயணம்

ஒரு சில்லறைக் காசு

இன்று மகத்தான நாளாக இருக்குமா அல்லது அவலமான நாளாக இருக்குமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் ஒரு வெற்றியாளராக இருப்பீர்களா அல்லது ஒரு தோல்வியாளராக இருப்பீர்களா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையில் எவற்றை உள்ளீடு செய்வதன் மூலம் எவற்றை வெளியீடாக பெறப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள், பெரும்பாலான மக்கள் எதையும் பெறுவதும் இல்லை, எதையும் அடைவதும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எதையும் கேட்பதும் இல்லை, எதையும் நம்புவதும் இல்லை. பெரும்பாலான மக்கள் வாழ்க்கை தங்களுக்கு கொடுக்கும் கழித்துப் போட்ட மிச்சம் மீதியிலேயே திருப்திப்பட்டுக் கொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். அதற்கு மாறாக வெளியே சென்று வாழ்க்கையின் வெற்றிகள் என்னும் விருந்து மேசையில் இருந்து உணவை சாப்பிடுவதில்லை.
உங்களால் டாலர்களை சம்பாதிக்க முடியும் போது சில்லறைக் காசுகளில் திருப்திப்பட்டு விடாதீர்கள். பெரிய கனவுகளை காணுங்கள், பெரிய சிந்தனைகளை சிந்தியுங்கள். உங்கள் இதயத்தின் ஆசைகளை உங்களால் அடைய முடியும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »