செய்திகள்

தஞ்சை மறைமாவட்ட ஆயர் மற்றும் குருக்களின் புதிய முயற்சி

தஞ்சை மறைமாவட்டம் ஆயர் சகாயராஜ் மற்றும் குருக்களின் சீரிய முயற்சியில்
ஏழை எளிய மாணவ போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு துவங்கப்பட்டது.

AMACE-AROCKIA MADHA IAS ACADEMY FOR COMPETITIVE EXAMS (ஆரோக்கிய மாதா IAS அகாடமி) தஞ்சை ஆயர் மேதகு T. சாகாயராஜ் DD அவர்கள் அகாடமியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்கள்.

உயர்திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகாடமி கட்டிடத்தை திறந்து வைத்தார். உயர்திரு இனிகோ இருதயராஜ் MLA மற்றும் உயர்திரு ஃபெலிக்ஸ் ராஜா RDO அகாடமியின் லட்சினையை (Logo) திறந்து வைத்தார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் இளம் தலைமுறையின் போட்டித் தேர்வுகள், UPSC (IAS) & TNPSC போட்டித் தேர்வுகள் பற்றிய தரமான தரவுகளையும், வெற்றி பெற உத்திகளையும், ஊக்கமூட்டும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர். எதிர்கால அரசுப் பணி அதிகாரிகளை ANACE IAS அகாடமியில் சேர்ந்து வெற்றி பெற வாழ்த்தினார்கள். தஞ்சை ஆயர் அரசுப் பணிகளிலும், அரசியல் தளத்திலும் அனைத்து தரப்பினரும் பங்குபெற்ற ஒரு அதிகாரமிக்க சமூகமாக மாற AMACE IAS அக்காடமி பேருதவியாக உழைக்கும் என்று நம்பிக்கையளித்தார்கள்.

அகாடமியின் ஆசியர்களையும், அகாடமியில் சேர வந்திருந்த இளைஞர் இளம் பெண்களை கலெக்டர் சகாயம் தனியாகச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

விழா ஏற்பாடுகளை AMACE IAS அக்காடமியின் பொறுப்பு தந்தையர்கள்- தந்தை தஞ்சை டோமி, தந்தை சூசைமாணிக்கம், தந்தை அமல், தந்தை தாசன் சிறப்பாக செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து Admission (சேர்க்கை) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

Anand Paul

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்திகள்

ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய
செய்திகள்

மனிதநேயத்தின் பெருமை

குட்டி கதை: ஒரு மனிதன் கடலோரத்தில் நடந்து சென்றபோது, ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கி இறந்து கொண்டிருந்தன. அவன் ஒவ்வொரு மீனையும் பொறுமையாக எடுத்து மீண்டும்
Translate »